வலது கால எடுத்து வச்சி வாடா கரிகாலா... காலாவில் ரஜினிக்கான ஓபனிங் சாங்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் காலா கரிகாலன் படத்தில் பாடலாசிரியர் விநிதன் என்பவர் எழுதியதாக ஒரு பாடல் வரிகள் டுவிட்டரில் வெளியாகியுள்ளது. எனினும் அதை இயக்குநர் ரஞ்சித் மறுத்துள்ளார்.

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 2.0 படம் தொழில்நுட்ப ரீதியிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ரஜினியின் 164-ஆவது படத்துக்கான படப்பிடிப்பு மே மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. படத்தின் பெயரை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் வெளியிட்டது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 3 மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. கபாலி படத்தை இயக்கிய பா. ரஞ்சித் இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் முடிந்தது.

படத்தின் டயலாக்குகள்

காலா படத்தின் ஆரம்ப காட்சியில் ரஜினி பேசும் பஞ்ச் வசனம் லீக் ஆனது. அதில் "நான் கால் வைக்கிறதும் வைக்காததும் உன் தலையை எடுக்கறதும் எடுக்காததும் உன்கிட்டதான் இருக்கு!" என ரஜினி தனக்கே உரிய குரலில் பேசுகிறார். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது.

மற்றொரு டயலாக்

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மற்றொரு வசனம் என்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் "ஆரம்பத்துல அப்பாவியா இருக்க நான் ஒன்னும் மாணிக்கமும் இல்லை. வேதவல்லிய தேடி போற கபாலியும் நான் இல்ல. பத்து பேர் நிக்கிற சண்டையில் 2 பேர் கையை ஒடச்சி, 3 பேரின் கால ஒடச்சி, மிச்ச இருக்கிற 5 பேர் என்னுடைய கால புடிச்சி கண்ணீர் விட்டு கதறவிடுறானே அந்த காலாடா! காலன் கரிகாலன்"!! என்ற வசனம் ரஜினி குரலில் இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த வசனங்களின் உண்மைத் தன்மை குறித்து தெரியவில்லை.

சென்னையில் படப்பிடிப்பு

சென்னையில் படப்பிடிப்பு

இதைத் தொடர்ந்து மும்பை தாராவி போன்று சென்னை பூந்தமல்லியில் செட் அமைத்து அங்கு படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இதனிடையே ரஜினிகாந்த் மும்பையில் அடுத்த கட்ட படப்பிடிப்புகளை முடித்து கொண்டு வழக்கமான உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார்.

ஓபனிங் சாங்

ஓபனிங் சாங்

இந்நிலையில் காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கான ஓபனிங் சாங் என பாடலாசிரியர் விநிதனின் டுவிட்டர் கணக்கில் இருந்து முழு பாடலும் சரணம், பல்லவியுடன் வெளியாகியுள்ளது. அதில் ஆரம்பமே அசத்தலாக "வலது கால எடுத்து வச்சி வாடா கரிகாலா...வால கொஞ்சம் ஆட்டினாக்க போடு ஒரே போடா...." என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.

ரஞ்சித் மறுப்பு

இந்த பாடல் வரிகளை கண்ட ரஜினியின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும் இது போலியானது என்றும் இதுபோன்ற பாடல் காலா படத்தில் இடம்பெறவில்லை என்றும் இயக்குநர் ரஞ்சித் தனது டுவிட்டரில் இருந்து வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A song which is released as Rajinikanth's opening song in Kaala from Lyricist Vinithan's twitter account. But Director B.Ranjith refused.
Please Wait while comments are loading...