For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரியலூர் விபத்து: ஓட்டுநர்களை தூக்கிலிட வேண்டும்- காடுவெட்டி குரு கொந்தளிப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

அரியலூர்: அரசு பேருந்தும் டேங்கர் லாரியும் அரியலூர் அருகே மோதியதில் 13 பேர் பலியாகி சம்பவத்தைத் தொடர்ந்து ஓட்டுநர்களைத் தூக்கிலிட வேண்டும் என்று வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு வலியுறுத்தியுள்ளார்.

அரியலூர் அருகேயுள்ள ஓட்டக்கோயில் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தும், டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 13 பேர் பரிதாபமாக பலியாயினர். மேலும் 33 பேர் படுகாயமடைந்து அரியலூர் மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Kaduvetti Guru demands death sentence for drivers

இதைத்தொடர்ந்து விபத்தில் பலியானவர்களின் உடல் அவரவர்கள் வீட்டினர் எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொருத்தருடைய வீட்டிற்கும் அரசியல் பிரமுகர்கள், தலைவர்கள் வந்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த விபத்து பற்றி வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு பேசுகையில், லைசென்ஸ் இல்லாமலும் முறையான பயிற்சி பெறாத ஓட்டுநர்களை வேலைக்கு அமர்த்திய வாகனத்தின் உரிமையாளரை கைது செய்து அந்த வாகனத்தை தடை செய்யவேண்டும் இந்த விபத்திற்கு காரணமான ஓட்டுநர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.

இந்த விபத்தில் இறந்தவர்களின் 75% பேர் வன்னிய இன மக்கள். நாகல் குழியில் மட்டும் மூன்று பேர். தேர்வு எழுத சென்றவர்கள் பிணமாக திரும்பி வந்துள்ளனர். இதனால் மிகவும் மன வேதனை அடைந்துள்ளேன். இந்த ஊர் மக்கள் அனைவரும் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இவ்வாறு ஜெ.குரு பேசினார்.

English summary
Vanniyar Sangam leader Kaduvetti Guru demands death sentence for "accidents drivers".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X