200 ஆண்டு சாதிய கொடூரம்.. “உடைத்தெரிந்த” கள்ளக்குறிச்சி தலித்துகள்! “கெத்தாக” கோயில் சென்று வழிபாடு
கள்ளக்குறிச்சி: சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலுக்குள் சென்று பூஜை செய்ய ஆதிதிராவிட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆதிதிராவிடர் மக்களுக்கு கோவிலுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவின் நடவடிக்கை அங்குள்ள அய்யனார் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்து உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு சென்று பூஜை செய்ய ஆதிதிராவிடர் சமூக மக்களுக்கு இல்லாமல் இருந்தது.
உயர்சாதியினரும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் மட்டுமே இந்த கோயிலில் வழிபாடு செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

தலித்துகள் கோரிக்கை
இந்த கோவிலுக்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும், அதில் நுழைந்து தாங்களும் சாமி கும்பிட வேண்டும் எனவும் ஆதிதிராவிட மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அவர்கள் கோரிக்கை ஏற்கப்படாமல் நீண்ட காலமாகவே அவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டே வந்து இருக்கிறார்கள்.

இரு தரப்பு மோதல்
இந்த நிலையில் இந்த கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட வேண்டும் என ஆதிதிராவிட சமூக மக்கள் முடிவெடுத்து கடந்த ஆறு மாத காலமாக போராடி வந்து உள்ளனர். இதன் காரணமாக சமீபத்தில் இரு தரப்பினர் இடையே மோதலும் ஏற்பட்டு இருக்கிறாது. அதேபோல் சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்திலும் சமாதான கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன.

அரசு கொடுத்த அனுமதி
இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று கோயிலில் வழிபாடு செய்ய அனுமதி ஆதிதிராவிட மக்கள் அனுமதி கோரினர். அவர்களுக்கு அனுமதி கிடைத்ததை அடுத்து இன்று ஆதிதிராவிட மக்கள் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளே நுழைந்து சாமி கும்பிடுவதற்கு முடிவு செய்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு
இதையடுத்து இன்று எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் பட்டியலின மக்கள் கோயிலுக்கு செல்ல எந்த தடையும் ஏற்படாத வகையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காக அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். கள்ளக்குறிச்சி டிஐஜி பகலவன், விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா ஆகியோரது தலைமையில் ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், அதிரடி படையினர் என பலர் அங்கு குவிக்கப்பட்டனர்.

தலித்துகள் பூஜை
போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பகுதியில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பூஜை சாமான்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து வரதராஜா பெருமாள் கோவிலுக்கு உள்ளே கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் சாமி கும்பிட தொடங்கினர்.

200 ஆண்டுகால சாதிய கொடூரம்
200 ஆண்டுகளாக கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட ஆதிதிராவிட சமூக மக்கள் இன்று பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் கோவிலுக்குள் நுழைந்து பெருமாளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். 200 ஆண்டுகால போராட்டத்துக்கு தீர்வு கிடைத்ததால் ஆதிதிராவிட சமூக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு காணப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டையில் பட்டியலின மக்கள் கோயிலுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நடவடிக்கை எடுத்த நிலையில், கள்ளக்குறிச்சியிலும் இந்த புரட்சி தொடர்ந்திருக்கிறது.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications