கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை..நிர்வாகி, ஆசிரியைகளை 1 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு கோர்ட் அனுமதி
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் கைதான 5 பேரை ஒரு நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கர் உள்ளிட்ட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி க்கு அனுமதி வழங்கி விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார்.

ஆரம்பம் முதலே மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டி வந்தனர். பள்ளி சார்பில் சரியான பதில் அளிக்காததால் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என மாணவியின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
பள்ளியில் உள்ள பொருட்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். வாகனங்களுக்கு தீ வைத்தனர். சான்றிதழும் எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். முன்னதாக மாணவியின் மர்ம மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை போலீசார் அடுத்தடுத்து கைது செயத்னர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 5 பேரும் 15 நாட்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, கைதான பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் 5 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
Recommended Video
அதன்படி, பள்ளி நிர்வாகிகள் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கர் உள்ளிட்ட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி க்கு அனுமதி வழங்கி விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications