கமல்ஹாசன் ரசிகர்களின் நிவாரண மற்றும் மருத்துவ உதவிகளுக்கு... அதிகாரிகள் அனுமதி மறுப்பு
சென்னை: கமல்ஹாசன் ரசிகர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவ முகாம் ஆகியவற்றிற்கு கடலூர் நகராட்சி மன்ற அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகளை வழங்கி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை சீரமைக்கத் தேவையான ஏற்பாடுகளையும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை நடிகர் கமல்ஹாசனின் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ரசிகர்கள் ஒன்றிணைந்து கடலூர் பகுதியில் மருத்துவ முகாம் நடத்த முன்வந்தனர்.
கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் உள்ள நகராட்சிப் பள்ளியில் இந்த நிகழ்ச்சியானது தொடங்கப்பட்டது. உதவிகளைப் பெற ஏராளமான பொதுமக்கள் வந்து காத்திருந்த நிலையில் அங்கே வந்த நகராட்சி அதிகாரிகள் இங்கே வைத்து இந்த நிகழ்சிகளை நடத்தக் கூடாது.
நாங்கள் நீங்கள் அனுப்பிய அனுமதிக் கடிதத்தை பரிசீலனை செய்வதாகத் தான் கூறினோம். ஆனால் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கவில்லை என்று கூறினர்.
இதனைக் கேட்டு கமல்ஹாசன் மன்ற நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தில் நகராட்சிப் பள்ளியில் வைத்து உதவிகளை வழங்கக் கூடாது.
ஆனால் நீங்கள் ஏதேனும் தனியார் மண்டபங்களில் வைத்து நடத்தலாம் என்று அதிகாரிகள் யோசனை கூற, இதில் சமாதானம் அடைந்த ரசிகர்கள் பக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி, மருத்துவ முகாமையும் நடத்தினர்.
இதனால் சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications