கமல் ஹாசன் கண்டித்த போஸ்டர் இதுதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல்ஹாசன் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை எழுப்பியுள்ள நிலையில் அதைக் கண்டித்துள்ளார் கமல்.

தமிழக அரசில் நிலவி வரும் ஊழல் தொடர்பாக பேசியுள்ளார் கமல். இது பெரும் அதிர்வலைகளை அரசு மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது. கமல் ஹாசனை அமைச்சர்களும், பாஜகவைச் சேர்ந்த சிலரும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கமலுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் களம் இறங்கியுள்ளனர். அமைச்சர்களைக் கண்டித்தும், கமலை விமர்சிப்பவர்களைக் கண்டித்தும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல் ரசிகர்கள் வைத்த போஸ்டர்களில் ஒன்றுதான் இது.

MGR Daily slammed Actor Kamal Haasan-Oneindia Tamil

குறிப்பாக மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதைத் தொடர்ந்து தான் தனது ரசிகர்கள் நற்பணி செய்தால் மட்டும் போதும், போஸ்டர்களுக்காக காசை செலவழிக்க வேண்டாம் என்றும், பதிலளிக்க வேண்டிய வேலையை தான் பார்த்துக் கொள்வதாகவும் கமல் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kamal Haasan fans all over Tamil Nadu are putting up harsh posters against the Ministers and others. Kamal has asked his fants to remove them .
Please Wait while comments are loading...