முதல்வர் பதவிக்கு, ரஜினியை விட கமலுக்கு அதிக ஆதரவு.. ஒன்இந்தியாதமிழ் கருத்துகணிப்பில் சுவாரசியம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  என்னாது தமிழக முதல்வராவாரா ரஜினி?-வீடியோ

  சென்னை: நடிகர் ரஜினிகாந்த் முதல்வராக பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்திருப்பதாக மத்திய அரசு நடத்திய ரகசிய கணக்கெடுப்பில் தெரியவந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

  இந்த நிலையில், மக்களின் மனநிலை என்ன என்பதை அறிந்து கொள்ள 'ஒன்இந்தியாதமிழ்' வெப்சைட்டில் ஒரு சர்வே நடத்தினோம்.

  இந்த சர்வேயில், முதல்வர் பதவிக்கு இவர்களில் யார் பெஸ்ட்? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. இதற்கு 4 ஆப்ஷன்கள் தரப்பட்டன. ரஜினி, கமல், இரண்டு பேருமே லாயக்கில்லை, இவர்களைவிட பெஸ்ட் தமிழகத்தில் நிறைய உள்ளனரே என்று ஆப்ஷன்கள் தரப்பட்டன.

  ரஜினிக்கு குறைந்த ஆதரவு

  ரஜினிக்கு குறைந்த ஆதரவு

  முதலாவது ஆப்ஷனான 'ரஜினி' பெயர் தரப்பட்டது. ரஜினிதான் முதல்வர் பதவிக்கு பெஸ்ட் என்று, வாக்களித்தவர்களில் 12.2 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதில் கவனிக்கத்தக்கது ரஜினிக்குதான், இருப்பதிலேயே, குறைந்த அளவு ஆதரவு கிடைத்துள்ளது.

  ரஜினியைவிட கமலுக்கு ஆதரவு அதிகம்

  ரஜினியைவிட கமலுக்கு ஆதரவு அதிகம்

  இந்த வாக்கெடுப்பில், கமல்தான் பெஸ்ட் என்று 27.48 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதாவது ரஜினியைவிட இரு மடங்குக்கும் அதிகமான ஆதரவை கமலுக்கு கொடுத்துள்ளனர் வாசகர்கள். இதன் மூலம், பந்தையத்தில் ரஜினியை, கமல் முந்திவிட்டார் என்பது தெளிவாக தெரிகிறது.

  இரண்டுபேருமே வேண்டாம்

  இரண்டுபேருமே வேண்டாம்

  இரண்டு பேருமே லாயக்கில்லை என்ற ஆப்பஷனுக்கு, 18.35 சதவீதம்பேர் வாக்களித்துள்ளனர். இரு நடிகர்கள் மீதுமே அபிப்ராயம் இல்லாத வாசகர்கள் இந்த ஆப்ஷனுக்கு வாக்களித்துள்ளனர் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

  பெஸ்ட் நிறையபேர்

  பெஸ்ட் நிறையபேர்

  'இவர்களைவிட பெஸ்ட் தமிழகத்தில் நிறைய உள்ளனரே' என்று தரப்பட்ட ஆப்ஷனுக்கு 41.97 சதவீதம்பேர் வாக்களித்துள்ளனர். பல்வேறு கட்சிகளின் அபிமான வாசகர்கள் இதற்கு வாக்களித்திருக்கலாம் என்று தெரிகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Oneindia Tamil poll reveals Kamal Haasan gets more support for the CM race than Rajinikanth.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற