கமல்ஹாசன் அரசியல் பயணத்தை தொடங்கினார்- மாலையில் கட்சி பெயர் அறிவிப்பு
Recommended Video

ராமநாதபுரம்/மதுரை: நடிகர் கமல்ஹாசன் இன்று தமது அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தொடங்கினார். மதுரையில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சி பெயர், கொள்கைகள், நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவிக்க இருக்கிறார்.
தமிழக அரசியலில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் திடீரென அரசியலில் குதித்துள்ளனர். இதில் நடிகர் கமல்ஹாசன் இன்று முதல் அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார்.

இதையொட்டி மூத்த இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு, திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உள்ளிட்டோரை சென்னையில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இன்று ராமேஸ்வரத்தில் மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து கமல்ஹாசன் அரசியல் பயணத்தை தொடங்கினார்.
தமிழகத்தின் அரசியல் கட்சிகள் உருவெடுத்த இடமான மதுரையில் மாலையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கட்சியின் பெயர், கொள்கைகள் மற்றும் நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவிக்கிறார். இப்பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.
இப்பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து மக்களை சந்திக்கும் சுற்றுப் பயணத்தை கமல்ஹாசன் மேற்கொள்கிறார்.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications