எனது டுவிட்டர் பக்கமானது மருது சகோதரர்கள் பயன்படுத்திய கோயில் சுவர் போன்றது- கமல்

சென்னை: வணக்கம் டுவிட்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன், தனது டுவிட்டர் பக்கம் மருது சகோதரர்கள் பயன்படுத்திய கோயில் சுவர் போன்றது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அரசுக்கு எதிராக கருத்தையும், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியும் வந்த கமல்ஹாசன் தற்போது 4 மாதங்களுக்கு முன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.
அதன் மூலம் சில செயலிகளையும் ஆப்களையும் உருவாக்கி மக்களின் குறைகளை கேட்டறிந்து அதை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறார். இந்நிலையில் இவர் நேற்று வணக்கம் இந்தியா என்ற டுவிட்டர் நிகழ்ச்சியில் லைவாக பேசினார்.
|
டுவிட்டரில் லைவ் நிகழ்ச்சி
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் தன்னிடம் கேள்வி கேட்க #AskKamalHaasan என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தனது டுவிட்டர் பக்கத்துக்கு அனுப்பலாம் என்றும் அதற்கான பதிலை நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அளிக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

டுவிட்டர் செயல்பாடு குறித்த கேள்வி
இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. அதில் மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவரது டுவிட்டர் செயல்பாடு குறித்து அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினி கேள்வி எழுப்பினார். அதற்கு கமல் பதில் அளிக்கையில், டுவிட்டர் என்னுடைய பொழுதுபோக்கு பக்கம் அல்ல.

பிரச்சினை தீராது
மருது சகோதரர்கள் எப்படி வெள்ளையர்களுக்கு எதிராக போர் பிரகடனத்திற்கு கோயில் சுவர்களை பயன்படுத்தினார்களோ அது போல் என் கருத்துகள், எதிர்ப்புகள் மற்றும் கோபங்களைத் தெரியப்படுத்தவே டுவிட்டர் பக்கத்தை பயன்படுத்துகிறேன். பத்தரிகை தலையங்கங்கள் மட்டும் பிரச்னைகளைப் போக்கிவிடாது.

ஆறுதலாக இருக்கும்
முகம் தெரியாத நபர்கள் கேட்கும் கேள்விக்கு எப்படி பதில் அளிக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அது மொட்டை மாடியிலிருந்து யாருக்கும் தெரியாமல் எச்சில் துப்புவது போன்று. அது சில நேரம் சாலைகளில் செல்வோர் மீது விழும். சில நேரம் விழாது. ஆனால் துப்பியவருக்கு தான் எச்சிலை துப்பிவிட்டோம் என்ற ஆறுதல் கிடைக்கும். அதுபோல் தான்.

மாற்றம்
சினிமா நடிகரிலிருந்து அரசியல்வாதி என்ற பெரும் மாற்றத்துக்கு நான் முன்உதாரணமாக உத்வேகமாக எடுத்து கொண்ட நபர் மகாத்மா காந்தி. என் தந்தை எப்படி என்னையும் என் சகோதரர்களையும் நேர்மையானவர்களாக வளர்த்தெடுத்தாரோ அதுபோல் தன் கட்சி தொண்டர்களை பார்த்துக் கொள்வேன். ஊழல்வாதிகள் கட்சியிலிருந்து வெளியேற்றிவிடுவேன் என்றார் கமல்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!