For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊழலுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் ராஜினாமா செய்வாரா? கமல்ஹாசன்

ஊழலுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் ராஜினாமா செய்வாரா என்று கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஊழலுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் அவராகவே ராஜினாமா செய்ய வேண்டாமா? அவரது ராஜினாமாவை எந்த கட்சியுமே ஏன் கோரவில்லை? என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழக அரசுக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வந்தார் நடிகர் கமல். அதற்கு கொந்தளித்த அமைச்சர்கள், கமல் அரசியலுக்கு வந்து கேள்வி கேட்கட்டும் நாங்கள் பதில் கூறுகிறோம் என்று கூறியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த கமல், நான் எப்போதே அரசியலுக்கு வந்து விட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் ஊழல்களை அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்குமாறு ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் கோரிக்கை விடுத்தார்.

தாக்கு

தாக்கு

இதனால் கமல்ஹாசன் அரசியலுக்கு வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மறைமுகமாகவே தமிழக அரசை விமர்சித்த கமல் தற்போது முதல்வரை நேரடியாக விமர்சித்துள்ளார்.

ஏரளமான குற்றங்கள்

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிடுகையில், தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்து வருகின்றன. ஒரு மாநிலத்தில் ஊழல், துயர சம்பங்கள் நடந்தால் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்.

ஏன் ராஜினமா இல்லை?

ஏன் ராஜினமா இல்லை?

தமிழகத்தில் ஏராளமான குற்றங்களும் நடந்தபோதிலும் முதல்வர் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எந்த கட்சியும் கோராதது ஏன்?

சிறப்பான தமிழகம்

எனது இலக்கு தமிழகம் சிறப்பாக இருக்க வேண்டும். எனது குரலுக்கு வலுசேர்க்க யாருக்கு துணிச்சல் இருக்கிறது திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எனக்கு கருவியாக இருக்க வேண்டும். இவைகள் மழுங்கிப் போயிருந்தால் வேறு ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

English summary
Kamal demands the TN Cm Edappadi Palanisamy to resing his post to take responsible for scandals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X