கமல்ஹாசன் களத்திற்கு வந்து போராட வேண்டும்: கருணாஸ் அழைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் சிஸ்டம் சரியில்லை என்று விமர்சனம் செய்தால் மட்டும் போதாது. களத்திற்கு வந்து போராட வேண்டும் என நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டதொடருக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் கூறுகையில், நடிகர் கமலஹாசன் மீது தொடர்ந்து நன்மதிப்புகளை வைத்துள்ளேன். சிஸ்டம் சரியில்லை என்று விமர்சனம் செய்தால் மட்டும் போதாது, களத்திற்கு வந்து போராட வேண்டும். சிஸ்டத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு கமல்ஹாசனுக்கும், அனைவருக்கும் உள்ளது.

Kamal Hassan has the responsibility to change the system -karunas

மேலும் ஜி.எஸ்.டி மற்றும் கேளிக்கை ஆகிய இரட்டை வரிவிதிப்பால் திரைப்படத்துறை நெருக்கடி நிலையில் உள்ளது. இதனால் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் மட்டுமே ஒடக்கூடிய நிலை ஏற்படுகிறது. தமிழ் உணர்வு சார்ந்த சிறு குறு படங்கள் வெளிவரதா சூழல் ஏற்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor karunas says Kamal Hassan has the responsibility to change the system.
Please Wait while comments are loading...