ராகுல் காந்தி மனிதநேயம்.. கமல்ஹாசன் பாராட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  முருகன் சாந்தன் பேரறிவாளனை மன்னித்த ராகுல்

  ஈரோடு: ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல் காந்தி கூறியது மனிதநேயம் என்று கமல் தெரிவித்தார்.

  சிங்கப்பூரில் முன்னாள் ஐஐஎம் மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுலிடம் ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டீர்களா எ்ன்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் முன்பு கோபத்தில் இருந்தோம். தற்போது மன்னித்துவிட்டோம் என்றார்.

  Kamal hassan says that Rahul's comment on Rajiv killers is humanity

  ராகுலின் கருத்தை அரசியல் கட்சிகள் வரவேற்கின்றன. ஈரோட்டில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல் கூறியது மனிதநேயம்.

  ஆனால் நாம் கேட்பது சட்டத்தின் தளர்வு. மனிதநேயம் வேறு சட்டத்தின் தளர்வு வேறு.

  கிறிஸ்துவ அமைப்புகள் எனக்கு நிதி உதவி செய்வதாக கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு. இதை கேட்கும் போது எனக்கு சிரிப்புதான் வருகிறது. தான்தோன்றித்தனமாக கேட்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்றார் கமல்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Kamal hassan says that Rahul forgives Rajiv Killers is a Humanity act. But we are asking relaxation in Law. So both are different.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற