அரசுக்கு எதிராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பஞ்ச் பேசினாரா கமல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசுக்கு எதிராக கமல் இன்று பேசியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் பொதுமக்களால் அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள காயத்திரி சேரி பிஹேவியர் என்று நடிகர் ஓவியாவைத் திட்டியதால் தமிழக மக்களிடம் இருந்து நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

Kamal speaks politics in Big Boss

இந்நிலையில், இன்றை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் தமிழக அரசை மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளார். இதுகுறித்து கவிஞர் மனுஷ்ய புத்திரன் தனது பேஸ்புக் பதிவில் "கமல் அரசியலுக்கு வருவது பற்றி மீண்டும் சூசகம்" என்ற தலைப்பிட்டு சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அதில், "வெளியே வந்து கவனிச்சுகிறேன் என்று நீங்க ஒருத்தரை மிரட்ட முடியுமா? வெளியே நான் இருக்கேன். அநீதியா எதையும் நடக்கவிடமாட்டேன்." - கமல் (பிக் பாஸில் காயத்ரியிடம்)

கமல் அதிமுக அரசுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கையாக இதைக் கருதி அதிமுக அமைச்சர்கள் இதை எதிர்த்து நாளை அறிக்கை விடக்கூடும். முக நூலிலும் டிவியிலும் கமலின் இந்த ஸ்டேட்மெண்டின் அர்த்தம் வரும்வாரம் முழுக்க விவாதிக்கப்படலாம். அர்ஜின் சம்பத்தும் எச். ராஜாவும் என்ன சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamal has spoken politics in Big Boss telecasted in Vijaya TV.
Please Wait while comments are loading...