For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சங்கர ராமன் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி ஹைகோர்ட்டில் மனு

சங்கர ராமன் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சங்கர ராமன் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் சங்கரமடத்தில் பணியாற்றிய சங்கரராமன், 68வது சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி மறைந்ததும் பொறுப்புக்கு வந்த ஜெயேந்திரருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மடத்திலிருந்து வெளியேறினார்.

பின்னர் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராக பொறுப்பேற்றார். 3.9.2004இல் கோயில் வளாகத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை சதி திட்டமிட்டதாக ஜெயேந்திரர், விஜயேந்திரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஜெயேந்திரர், விஜயேந்திரர் கைது

ஜெயேந்திரர், விஜயேந்திரர் கைது

ஆந்திராவில் இருந்த ஜெயேந்திரர், விஜயேந்திரர் 11.11.2004ல் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.

23 பேர் விசாரணைக்கு ஆஜர்

23 பேர் விசாரணைக்கு ஆஜர்

இந்த வழக்கில் 25 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் ரவி சுப்பிரமணியன் அப்ரூவர் ஆனதாலும் கதிரவன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டதாலும் எஞ்சிய 23 பேர் மட்டும் வழக்கு விசாரணையின் போது ஆஜராகி வந்தனர்.

புதுச்சேரிக்கு மாற்றம்

புதுச்சேரிக்கு மாற்றம்

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை புதுச்சேரி நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சங்கராச்சாரியார் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து புதுச்சேரி நீதிமன்றத்துக்கு விசாரணையை மாற்றியது உச்சநீதிமன்றம்.

மீண்டும் மனுத்தாக்கல்

மீண்டும் மனுத்தாக்கல்

புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் ஜெயேந்திரர் உள்ளிட்ட 24 பேரும் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் சங்கராச்சாரியார்கள் விடுக்கப்பட்டதை எதிர்த்து வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசு வக்கீல் மீது சந்தேகம்

அரசு வக்கீல் மீது சந்தேகம்

வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் சங்கராச்சாரியார்களின் விடுதலைக்க எதிரான இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்ற சங்கரராமன் கொலை வழக்கில் அரசு சார்பில் ஆஜரான வக்கீல் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆள்மாறட்டம் செய்தது அம்பலம்

ஆள்மாறட்டம் செய்தது அம்பலம்

தேவதாஸ் என்பவர் புதுச்சேரி அரசு சார்பாக உத்தரவே இல்லாமல் ஆஜராகி வந்துள்ளார். தேவதாஸ் என்பவர் ஆள்மாறாட்டம் செய்து ஆஜரானது தற்போதுதான் தெரியவந்துள்ளது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸும் அடக்கம்

போலீஸும் அடக்கம்

புதுச்சேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சங்கரராமன் கொலை வழக்கில் 17 பேர் பிறழ் சாட்சியாக மாறினர் என்றும், அவர்களில் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாரும் அடக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையாக நடக்கவில்லை

முறையாக நடக்கவில்லை

நீதிபதி மாற்றப்பட்ட நிலையில் ஜெயேந்திரர் உள்ளிட்ட 24 பேர் விடுதலையாயினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை முறையாக நடக்கவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாட்சிகளுக்கு பாதுகாப்பு

சாட்சிகளுக்கு பாதுகாப்பு

விசாரணையில் குளறுபடிகள் நடந்துள்ளதால் மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகளின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூசு தட்டப்படும் வழக்கு

தூசு தட்டப்படும் வழக்கு

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இதன்மூலம் சங்கரராமன் கொலை வழக்கு மீண்டும் தூசு தட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Kanchi Sankara Raman murder case: A Petition fiiled in Chennai high court against Sankarachariyars accuited in the case. Lawyer Manikandan filed case against them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X