தமிழக அரசு சுயமாக முடிவெடுப்பது இல்லை - கனிமொழி தாக்கு : வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் ஆளும் கட்சி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை பாஜகவின் தலைவர்களே சொல்கிறார்கள் என கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.

திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் ஆளும் அரசு தானாக செயல்படும் அரசாக இல்லை. ஆளும்கட்சி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று திமுக சொல்லி வந்தது. ஆனால் இப்போது பாஜகவின் மூத்த தலைவர்களே அதை வெளிப்படையாக சொல்லி வருகிறார்கள்.

Kanimozhi M.P attack Tamilnadu government

குடியரசு தலைவர் தேர்தலில் யாரை தேர்ந்தெடுப்பது என்பதை திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கலந்தாலோசித்து வருகிறார்கள். எல்லாருடனும் ஆலோசித்து குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து முடிவெடுக்கப்படலாம்.

மத்திய அரசு ஆதார் அட்டையை எல்லா விஷயங்களுக்கும் கட்டாயப்படுத்துகிறது. அதுவும் அரசின் சலுகைகளைப் பெற ஆதார் அவசியம் என வலியுறுத்திக்கொண்டே உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் ஆதார் அட்டையை வாங்கவில்லை என்னும் நிலையில் அவர்களது நிலைமை குறித்தும் மத்திய அரசு யோசிக்க வேண்டும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu government is under the control of central government said Kanimozhi M.P in Chennai airport
Please Wait while comments are loading...