7 பேர் விடுதலை: ஜெயலலிதா எடுத்திருப்பது துரித முடிவு அல்ல-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மகிழ்ச்சியளிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிக்கை வாதித்த முதலமைச்சர் ஜெயலலிதா, 7 பேரையும் விடுதலை செய்வது என இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கூறினார்.

Karuna Welcomes TN govt Order on Rajiv Assassination Case

இதுகுறித்து சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கருணாநிதி பதிலளித்தார்.

கேள்வி: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்க தமிழக அமைச்சரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றிய போதிலும், அதனை மத்திய அரசுக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார்களே, அது பற்றி உங்கள் கருத்து என்ன?

கருணாநிதி: மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவேண்டும். ஒப்புதல் அளிக்குமென்று நம்புகிறேன். அவர்களும் ஒப்புதல் அளித்து தூக்குத் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டால் நாம் மேலும் மகிழ்ச்சி அடையலாம்.

கேள்வி: தமிழக அரசு துரித முடிவு எடுத்திருப்பதாக கருதலாமா?

கருணாநிதி: இது துரித முடிவு அல்ல. 2011ம் ஆண்டிலேயே இந்தக் கருத்தினை நான் தெரிவித்தபோது அதை ஏற்காமல் ஏகடியம் பேசியவர் தான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் இன்றைக்கு அதே நிலையை அவர் எடுத்திருப்பதை நான் பாராட்டுகிறேன்.

கேள்வி: தமிழக அரசே விடுவித்திருக்கலாமே; மத்திய அரசுக்கு அனுப்புவது அவசியமா?

கருணாநிதி: அது பற்றி விரிவாக முன்கூட்டியே யோசித்திருப்பார்களானால், இன்றைக்கே அவர்களை விடுதலை செய்திருக்கலாம். தாமதம் ஏற்படாது. தாமதமாக வந்தாலும் நாம் மகிழ்ச்சியடையக் கூடிய முடிவு ஏற்படுமேயானால் நல்லதுதானே!

தலைவர்கள் வரவேற்பு:

தமிழக அரசின் முடிவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தா.பாண்டியன், ஜி.ராமகிருஷ்ணன், நெடுமாறன், கி.வீரமணி உள்ளிட்டோரும் தமிழக அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+