கருணாநிதி உடல் நலனுடன் இருக்கிறார்.. அவர் பூரண குணமடைய வேண்டும்.. முதல்வர் பழனிச்சாமி பேட்டி
திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல் நலனுடன் இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல் நலனுடன் இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இப்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். அவரை வரிசையாக தலைவர்கள் சென்று சந்தித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சேலம் சென்று இருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். பல்வேறு கேள்விகளுக்கு அவர் இதில் பதில் அளித்தார். கருணாநிதியின் உடல்நிலை குறித்தும் அவர் பேசினார்.
அதில், இறைவன் அருளால் காவிரியில் தண்ணீர் வருகிறது. காவிரிக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். இயற்கை நமக்கு சாதகமாக இருக்கிறது. தமிழகம் முழுக்க எல்லா அணைகளும் நிரம்பி இருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சரியாக தண்ணீர் வருகிறது.
சேலம் சாலை ஏற்கனவே மக்களுக்கு பெரிய அளவில் உதவும் என்று கூறி இருந்தேன். நில உரிமையாளர்களுக்கு சரியான இழப்பீடு கொடுக்கப்படும். தமிழகம் முன்னேற இந்த சாலை அதிகம் உதவும். இந்தியாவிலேயே இது இரண்டாவது பெரிய சாலை.
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அதிமுக சார்பாக விசாரிக்கப்பட்டது. அதிமுக அமைச்சர்கள் அவரை சந்தித்து வந்தனர். கருணாநிதி உடல்நலத்துடன் இருக்கிறார். அவர் முழு உடல்நலத்துடன் திரும்பி வர வேண்டும் என்று அதிமுக சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.












Click it and Unblock the Notifications