அறிஞர் அண்ணா என உச்சரித்த கருணாநிதி- துரைமுருகன் நெகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்செங்கோடு: அறிஞர் அண்ணாவின் பெயரை கருணாநிதி உச்சரித்ததாக கருணாநிதி நெகிழ்ச்சி அடைந்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக வெளியே எங்கும் வருவதில்லை. கட்சி பணிகளிலும் ஈடுபடுவதில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு முரசொலி அலுவலகத்துக்கு வந்த கருணாநிதி மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் ஒரு நாள் தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

தொண்டர்கள் மகிழ்ச்சி

தொண்டர்கள் மகிழ்ச்சி

அதன்பின்னர் அண்ணா அறிவாலயத்துக்கு சென்ற அவர் அங்கு வருகை பதிவேட்டில் மு.கருணாநிதி என்று கையெழுத்திட்டார். அவரது உடல் நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதை கண்டு தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிஐடி காலனிக்கு

சிஐடி காலனிக்கு

கொள்ளு பெயருடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சிகள் அண்மையில் வெளியானது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் கோபாலபுரத்திலிருந்து சிஐடி காலனிக்கு சென்று வந்தார்.

பொருத்தப்பட்ட குழாய்

பொருத்தப்பட்ட குழாய்

இதுகுறித்து திருச்செங்கோட்டில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறுகையில் கருணாநிதியின் தொண்டையில் பொருத்தப்பட்ட குழாயை எடுத்துவிட்டு மருத்துவர்கள் அவருக்கு பேச்சு பயிற்சி கொடுத்து வருகின்றனர்.

உங்கள் பெயர் என்ன?

உங்கள் பெயர் என்ன?

அவரது தொண்டை குழாயின் வெளிபக்கம் கருவி பொருத்தியதால் ஏற்பட்ட துளையை மூடிக் கொண்டு அவரை பேசுமாறு மருத்துவர்கள் தெரிவித்தனர். முதலில் உங்கள் பெயர் என்ன என்று கேட்டனர்.

யாரை பிடிக்கும் ?

யாரை பிடிக்கும் ?

அதற்கு அவர் மு.கருணாநிதி என்றார். உங்களுக்கு யாரை மிகவும் பிடிக்கும் என்ற கேள்விக்கு அவர் அறிஞர் அண்ணா என்று கூறினார் என்று துரைமுருகன் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Durai Murugan says that Karunanidhi answers while the Doctors questions his name and his favourite leader. He will soon recover completely.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற