For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.வுக்கு தண்டனை விதித்த குன்ஹா தீர்ப்பின் முக்கிய அம்சம் இதுதான்...கருணாநிதி விளக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்த நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பின் சில முக்கிய அம்சங்களை திமுக தலைவர் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

Karunanidhi’s response to Jayalalithaa’s conviction

கேள்வி: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா கூறிய தீர்ப்பில் முக்கியப் பகுதி?

பதில்: எல்லாமே முக்கியப் பகுதிகள்தான்! இருந்தாலும் ஒன்றைக் குறிப்பிடுகிறேன்.

  • ஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக இருந்த 1991-1996ஆம் ஆண்டுகளில் அவருடைய வருமானம் 9 கோடியே 91 இலட்சத்து 5 ஆயிரத்து 94 ரூபாயாக இருந்தது. அந்தக் காலக் கட்டத்தில் அவர் செய்த செலவுகள் 8 கோடியே 49 இலட்சத்து 6 ஆயிரத்து 833 ரூபாய். இது பற்றி மிக நியாயமான சந்தேகங்களை வழக்கின் புகார்தாரரான அரசுத் தரப்பினர் எழுப்பியுள்ளனர்.
  • ஆனால் அதே காலகட்டத்தில் அசையாச் சொத்துக்களின் மதிப்பு 53 கோடியே 60 இலட்சத்து 49 ஆயிரத்து 954 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த அசையாச் சொத்துகள் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூவரின் கணக்குகளில் வருகின்றன. ஆனால், அவை எந்த வழியில் வந்தன என்பதற்குக் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. அதுபற்றி அவர்களால் நியாயமான கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்க முடியவில்லை.
  • பொது ஊழியர் ஆவதற்கு முன்பாக குற்றவாளிகள் தரப்பில் காட்டிய வருமானம் 2 கோடி ரூபாய். ஜெ., சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம், ஜெயா பப்ளிகேஷன்ஸ் ஆகியவற்றின் வருமானங்களும் இந்த இரண்டு கோடி ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது. ஆனால் பொறுப்பில் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் வருமானம் உயர்ந்துள்ள வேகத்தை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
  • இவர்கள் தரப்புக்குச் சொந்தமான பண்ணை 900 ஏக்கர் பரப்பை உடையது. அதை வெறும் ஏழு கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகக் கணக்கு சமர்ப்பித்துள்ளனர். அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையில் கூட இப்படி வாங்க முடியாது. அதாவது வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலம் என்ற வகையில் வாங்கி உள்ளனர். இப்படிப் பார்த்தால் ஒரு முழு கிராமத்தையே வாங்கிவிடலாம்.
  • இவர்களின் நிறுவனங்கள் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களைச் சொந்தமாக வைத்துள்ளன. ஆனால், அந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலம் எந்த வருமானத்தில் வாங்கப்பட்டது என்பதை அவர்களால் சொல்ல முடியவில்லை. அவற்றின் மதிப்பு எல்லாம் அரசு மதிப்பீட்டில் கணக்கிடப்பட்டு, இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. சந்தை மதிப்பீட்டின்படி கணக் கிட்டால், இவற்றின் மதிப்பை நாம் கற்பனையில் கூட கணக்குப் போட முடியாத அளவில் உயர்ந்து நிற்கும்.
  • ஜெயலலிதா இப்படிச் சொத்துகளை வாங்குவதற்கு மற்றவர்கள் உதவி உள்ளனர். புதிது புதிதாக நிறுவனங்களைத் தொடங்கியும், செயல்படாத நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத் தியும் ஜெயலலிதா சொத்துகளைச் சேர்க்க மற்ற வர்கள் உதவியுள்ளனர்.
  • அந்த நிறுவனங்களில் யாரும் எந்த முதலீடும் செய்யவில்லை. அவற்றின் பங்குகளை வாங்கவில்லை. அவற்றில் எந்த வர்த்தகமும் நடக்கவில்லை. ஆனால் நிறுவனங்கள் இவர்களுக்குச் சொந்தமாக உள்ளன. அவற்றின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி, சம்பாதித்த சொத்துகளை அந்தக் கணக்கில் சேமித்து வைக்கவும், அவற்றைத் தங்களுக்கு உரியதாக்கிக் கொள்ளவும் மட்டுமே செய்துள்ளனர்.
  • வாதப் பிரதிவாதங்களில் இவை எல்லாம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபண மாகியுள்ளது. அதாவது சொத்துகளை வாங்கிக் குவிப்பதற்கான பணப் பரிமாற்றம் மட்டுமே இந்த வங்கிக் கணக்குகளில் நடந்துள்ளது.
  • தமிழ்நாடு அரசாங்கத்தின் மிகப் பெரிய பொறுப்பில் இருந்து கொண்டு, ஜெயலலிதா இந்தக் குற்றங்களில் ஈடுபட்டது குற்றத்தின் கனத்தை அதிகரிக்கிறது. ஏன் அதிகரிக்கிறது என்றால், "மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி" என்று நீதிமொழி அறிவுறுத்துவதை இங்கு உணர வேண்டும்.
  • அந்த வகையில் பார்த்தால், ஜெயலலிதா தனக்குக் கீழ் இருந்த அரசு இயந்திரங்கள், கட்டமைப்புகள், அவற்றைச் சார்ந்த பொதுமக்கள் என ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தவறான வழியைக் காண்பித்துள்ளார்.
  • இவைகள் எல்லாம் நீதிபதி குன்ஹா அவர்களின் தீர்ப்பில் உள்ள வாசகங்களாகும்.‪
English summary
DMK leader M. Karunanidhi now cited the main points of Verdict against Jayalalithaa, after he chose to cite editorials and articles in newspapers and magazines on the court verdict.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X