For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் மரபுகள் மாற்றவதுதான் ஜனநாயகத்தை பாதுகாக்கும் இலட்சணமா?

By Mathi
Google Oneindia Tamil News

30-5-2006 அன்று நான் முதலமைச்சர் என்ற முறையில், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்தேன். அன்றையதினம் பா.ம.க. சார்பில் ஜி.கே. மணி அவர்களும், காங்கிரஸ் கட்சியின் சார்பாக சுதர்சனம் அவர்களும் பேசிய பிறகு நான் பேசினேனே தவிர, அன்றைய தினம் முதலமைச் சராக இருந்த நான் மட்டுமே பேச வேண்டுமென்று வலியுறுத்தவும் இல்லை, அவ்வாறு பேசவும் இல்லை.

2007ஆம் ஆண்டு, 20-1-2007 அன்று ஆளுநர் பேரவையில் உரையாற்றினார். அப்போது எதிர்க் கட்சியிலே இருந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவை யிலே எழுந்து அநாகரிகமாகக் கூச்சலிட்டு வெளி நடப்பும் செய்தனர். 27-1-2007 அன்று ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து நான் உரையாற்றினேன். அன்றைக்கும் நான் மட்டுமே பேசவில்லை. பா.ம.க. சார்பில் ஜி.கே. மணி அவர் களும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் டி.சுதர்சனம் அவர்களும் உரையாற்றிய பிறகுதான் நான் விவாதங்களுக்குப் பதிலளித்து உரையாற்றினேன்.

2008ஆம் ஆண்டு 23-1-2008 அன்று ஆளுநர் பர்னாலா பேரவையில் உரையாற்றி, 1-2-2008 அன்று நான் ஆளுநர் உரை மீதான விவாதங் களுக்குப் பதிலளித்தேன்.

2009ஆம் ஆண்டு, 21-1-2009 அன்று ஆளுநர் பர்னாலா பேரவையில் உரையாற்றி, அதன் பிறகு நான் முதுகு வலி காரணமாக மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்ட காரணத்தால், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு 30-1-2009 ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த தம்பி மு.க. ஸ்டாலின் பதிலுரை வழங்கினார்.

2010ஆம் ஆண்டுக்கான ஆளுநர் உரை 6-1-2010 அன்று படிக்கப் பட்டது. 11-1-2010 அன்று பா.ம.க. சார்பில் ஜி.கே. மணி, காங் கிரஸ் சார்பில் எஸ். பீட்டர் அல்போன்ஸ், அடுத்து அ.தி.மு.க. சார்பில் செல்வி ஜெ. ஜெயலலிதா ஆகியோர் உரையாற்றிய பிறகு, அன்றைய தினமே துணை முதல் அமைச்சராக இருந்த தம்பி மு.க. ஸ்டாலின் விவாதங் களுக்குப் பதிலளித்தார். நானும் அவையிலேதான் இருந்தேன். இவ்வளவு விவரங்களைத் தொகுத்து ஏன் கூறுகிறேன் என்றால், ஆளுநர் உரைக்கு முதல் அமைச்சர் பதில் கூறும் நாளில், கடைசியாக எதிர்க் கட்சித் தலைவர் பேசிய பிறகுதான் முதலமைச்சர் ஆளுநர் உரைக்குப் பதிலளித்துப் பேசுவது வழக்கம், மரபு.

எத்தனையோ ஆண்டுக் காலமாக இந்த மரபுதான் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு அந்த மரபை மாற்றி, எதிர்க்கட்சித் தலைவரை முதல் நாள் பேச விட்டு, மறுநாள் முதலமைச்சர் மட்டும் பதில் கூறுகின்ற பழக்கம் இதுவரை இல்லாத, சட்டமன்றம் பின்பற்றாத ஒரு புதிய ஏற்பாடு.

இதுதான் அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயக மரபுகளைப் பாதுகாக்கும் இலட்சணம்.

English summary
DMK leader Karunanidhi slammed TN CM Jayalalithaa on Assembly issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X