For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோடையில் சிறுவாணி தண்ணீர் கிடைக்குமா கேரள எதிர்ப்பால் கோவை மக்கள் கலக்கம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

கோயமுத்தூர்: கோவை நகருக்கு குடிநீர் வழங்கும் சிறுபாணி அணையில் நிரந்தர நீர் இருப்புக்கு கீழுள்ள அனுமதியற்ற குழாயை அடைக்கப்போவதாக கேரள அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேற்குதொடர்ச்சி மலையில் கேரள வனப்பகுதியில் 22.6 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சிறுவாணி அமை உல்ளது. 650 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்டது. இந்த அணையிக்குல் உல்ள நீர் உறிஞ்சும் கிணற்றில் ொ5 மீட்டர் உயரத்திற்கு மொத்தம் நான்கு வால்வுகள் உல்ளன. இதன் வழியாக தண்ணீர் வெளியேறி சாடிவயலுக்கு வருகிறது. அங்கிருந்து நீர் சுத்திகரிக்கப்பட்டு கோவைக்கு கொண்டு வரப்பட்டு நகர மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. அதுபோல வழியிலுள்ள கிராமங்களில் இரண்டு லட்சம் மக்களுக்கு சிறுவாணி குடிநீர் கிடைக்கிறது.

ஆண்டுக்கு இருமுறை சிறுவாணி அணை நிரம்புவது வழக்கம். ஆனால் கடந்தாண்டு மழை பற்றாக்குறை காரணமாக ஒருமுறை கூட நிரம்பவில்லை. இதைத்தொடர்ந்து அணையில் நீர் மட்டம் குறைந்ததால் நான்கு வால்வுகளுக்கும் கீழே அமைக்கப்ப்டுடல்ள குழாய் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு, குடிநீர் தேவை ஒரளவுக்கு பூர்த்தி செய்யப்பட்டது.

அணையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பணையில் தேங்கியிருந்த தண்ணீர் ஏற்றம் செய்யப்பட்டு நீர் உறி்சு கிணற்று பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. நீரை அதிகம் எடுப்பதற்காக நீர் உறிஞ்சு கிணற்றின் கீழ்பகுதியில் குழாய் பொருத்தப்பட்டது. இதற்கு கேரளாவிடம் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுவாணி நீர் உறிஞ்சு கிணற்றில், கேரள அரசின் அனுமதியின்றி, பொருத்தப்பட்டுள்ள குழாயை அடைக்கப்போவதாகவும், நிரந்த நீர் இருப்பில் இருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது என்றும், 1975ல் இருமாநிலங் களுக்கு இடையே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை தமிழகம் மீறியுள்ளதாகவும் கேரள நீர்ப்பாசனத்துறை தலைமை பொறியாளர் லத்திகா, தமிழக குடிநீர்வடிகால் வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

English summary
In a move that could affect water distribution in the Coimbatore city, the Kerala government has decided to speed up the process to close and plug a nine-feet diameter pipeline at the reservoir through which water has been coming to Coimbatore apart from the regular intake well which is in use at the moment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X