ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்... கொளத்தூர் மணி பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: துக்ளக் இதழ் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பொய்யான கருத்தை பதிவு செய்ததாகவும், இதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் பற்றி அப்பட்டமான பொய்யை பேசியுள்ளதாக கொளத்தூர் மணி சாடியுள்ளார்.

ரஜினி தனது பேச்சுக்கு மன்னிப்பு கோராவிட்டால் அவர் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முன்பாக மறியல், ஆர்ப்பாட்டம் நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மூட நம்பிக்கை

மூட நம்பிக்கை

1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன் சீதை ஆகியோர் உருவங்கள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய செய்தி வெளிவந்திருக்கிறது.

வலியுறுத்தல்

வலியுறுத்தல்

இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலைப் பரப்பி அதன் வழியே தமிழகத்தில் பெரியார் மீது மக்கள் கொண்டிருக்கிற நல்லெண்ணத்தை சிதைக்க வேண்டும் என்ற தீய உள்நோக்கோடும், தங்கள் எஜமானர்களை மகிழச் செய்ய வேண்டும் என பேசப்பட்டதாகவே நாங்கள் நம்புகிறோம். இந்த பொய்யான தகவலைப் பரப்பியதற்காக நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

அதுமட்டுமில்லாமல் தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வதந்தியைப் பரப்பி பொது அமைதியைக் குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் கழகத் தோழர்களும் பெரியாரியல் பற்றாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

சின்ன விஷயங்களுக்கெல்லாம் வழக்கு போடும் தமிழக அரசு தங்களுடைய இயக்கத்தின் மூலவராக கருதப்படும் பெரியார் மீது செய்யப்பட்ட இழிவுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாம் சில நாட்கள் கவனித்துப் பார்த்து, அடுத்த கட்ட நடவடிக்கையாக அவரது திரைப்படம் திரையிடப்படும் அரங்குகளுக்கு முன்னால் மறியல் ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளுக்கு அனைவரும் தயாராக இருப்போமாக!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+