நடிகர் - நடிகைகளுக்கு தடை.. குலசை தசராவிற்கு இனி சினிமா பிரபலங்களை அழைக்க கூடாது - கோட்டாச்சியர்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசை தசரா விழா அக்டோபர் மாதம் 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் குலசை தசரா விழாவிற்கு சினிமா பிரபலங்களை அழைத்து வர தரசா குழுக்களுக்கு அதிரடியா தடை விதித்து கோட்டாச்சியர் உத்தரவிட்டுள்ளார்.

உலக புகழ்பெற்ற தசரா விழா அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது. கர்நாடகாவின் மைசூருவிற்கு அடுத்ததாக தமிழகத்தில் உள்ள குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழா தான் மிகவும் பிரசித்திப்பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வரை தசரா விழா கொண்டாடடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிளை சேர்ந்த பக்தர்கள் முத்தாரம்மனுக்கு விரதம் கடைப்பிடித்து பல்வேறு வேஷங்கள் போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
காளி வேஷம், அம்மன் வேஷம், ராஜா, ராணி வேஷம், புராண கால அரசகர்கள், விலங்கு மற்றும் பறவை வேஷங்கள் போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த சமயத்தில் தசரா குழுவினர் மேள, தாளங்களுடன் ஆட்டம் ஆடி செல்வார்கள். இன்னும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர், நடிகைகளை அழைத்து வந்து நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இந்நிலையில் தான் 2026ம் ஆண்டுக்கான தசரா விழா அக்டோபர் மாதம் 11ம் தேதி கொடியேற்றுடன் தொடங்கி நடைபெற உள்ளது. அன்றைய தினம் முதல் பக்தர்கள் விரதம் கடைப்பிடித்து வேடமிட்டு பல்வேறு இடங்களுக்கு சென்று காணிக்கை வசூல் செய்வார்கள். இந்நிலையில் தான் தசரா விழா நெருங்கி வரும் நிலையில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குலசை தசரா விழாக்களுக்கு சினிமா பிரபலங்களை அழைத்து வர கூடாது. சினிமா பிரபலங்களை அழைத்து வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் உலோக ஆயுதங்களை எடுத்து வரக்கூடாது. மேலும் ஜாதி அடையாளத்துடன் பக்தர்கள் வருகை தரக்கூடாது என்று கோட்டாச்சியர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
