மவுசை இழந்த முகுல் வாஸ்னிக்.. செல்வாக்கு பறிபோகுமோ என்ற அச்சத்தில் குஷ்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் குஷ்புவின் செல்வாக்கு வேகமாக சரிந்து வருகிறதாம். மேலும் முத்தாய்ப்பாக தமிழக காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கின் செல்வாக்கும் டெல்லி மேலிடத்தில் சரிந்து வருகிறதாம். இதனால் குஷ்பு கவலையாகியுள்ளாராம்.

ஆரம்பத்தில் திமுகவில் இருந்தவர் குஷ்பு. அங்கு ஏற்பட்ட பிரச்சினையால் கட்சியை விட்டு வெளியேறினார். அதிரடியாக காங்கிரஸில் போய்ச் சேர்ந்தார்.

முன்னாள் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆசியும், ஆதரவும் கிடைத்தது. அதேபோல டெல்லியில் முகுல் வாஸ்னிக்கின் ஆதரவு கிடைத்தது.

இளங்கோவன் போனதால்

இளங்கோவன் போனதால்

இந்த நிலையில் இளங்கோவன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சியில் குஷ்புவின் செல்வாக்கு குறைந்து போனது. டெல்லியில் மட்டும் அவருக்கு முகுல் வாஸ்னிக் ஆதரவு கிடைத்தது.

முகுல் வாஸ்னிக் ஆதரவு

முகுல் வாஸ்னிக் ஆதரவு

டெல்லி மேலிடத்துடன் தொடர்பு கொள்ள முகுல் வாஸ்னிக்தான் உதவியாக இருந்து வருகிறார். ஆனால் தற்போது அதற்கும் சிக்கல் வந்துள்ளதாக சொல்கிறார்கள்.

எடுபடாமல் போன முகுல்

எடுபடாமல் போன முகுல்

தமிழக காங்கிரஸ் விவகாரங்களில் தற்போதெல்லாம் முகுல் சொல்வதை ராகுல் காந்தி பொருட்படுத்துவதில்லையாம். இது தமிழக காங்கிரஸ் தலைவருக்கு வசதியாகப் போய் விட்டதாம். முகுலை மாற்றக் கோரி மேலிடத்தை நிர்பந்தித்து வருகிறாராம்.

மாற்றப்படுவாரா முகுல்

மாற்றப்படுவாரா முகுல்

காங்கிரஸ் மேலிடத்திற்கும் முகுல் மீது அவ்வளவாக அபிப்பிராயம் இல்லாத காரணத்தால் முகுல் வாஸ்னிக் மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குஷ்பு அப்செட்

குஷ்பு அப்செட்

இது குஷ்புவுக்கு பெரும் கவலையைக் கொடுத்துள்ளதாம். தமிழகத்திலும் தனது ஆதரவு தலைவர் இல்லை. டெல்லியில் உள்ள முகுல் லாபியும் பறி போனால் எப்படி என்ற கவலையில் இருக்கிறாராம் குஷ்பு.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actress Kushboo is losing her grace in TNCC say sources. At the same time, her Delhi lobby Mukul Wasnik is also losing his base in the AICC circles.
Please Wait while comments are loading...