நாட்டின் வளர்ச்சி மீது நம்பிக்கையுள்ளவர்.. அண்ணாமலைக்கு காங். குஷ்பு வாழ்த்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் வளர்ச்சி மீது நம்பிக்கை கொண்டவர் ரஜினி எனவும் அவர் கூறியுள்ளார்.

ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கும், புது கட்சி அறிவிப்பிற்கும் பல்வேறு கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் பலர் எதிராகவும், சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய கட்சியான காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் குஷ்பு இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

kushboo wishes rajini about his political entry

அதில், ஜனநாயகத்தின் மீதும் வளர்ச்சி மீதும் நம்பிக்கைகொண்ட ரஜினிக்கும் அவரின் முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். ரஜினியின் அரசியம் பிரவேசம் சில கட்சிகளுக்கு திகிலையும், சில கட்சிகளுக்கு பலத்தை கூட்டியுள்ளதும் இந்த கலவையான விமர்சனங்களிலிருந்தே தெரியவருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
kushboo wishes rajini in twitter about his political entry. She tweeted, We know that Mr Rajnikanth believes in inclusive democracy and development. We wish him the all the best in his endeavors.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற