பெட்ரோல் லிட் . ரூ.70.90, டீசல் லிட். ரூ.60.02 - சென்னையில் இன்றைய விற்பனை விலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல் விலையில் இன்று சிறிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 பைசா குறைந்துள்ளது. டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

பெட்ரோல்-டீசல் விலையில் தினந்தோறும் லேசான மாறுதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதில் ஒருசில நாட்களை தவிர மீதமுள்ள நாட்களில் 2 முதல் 9 பைசா வரை அதிகரித்து தான் வந்தது.

Latest Petrol and Diesel Price in Chennai

இன்றைய தினம் பெட்ரோலின் விலை 3 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.70.90ஆகவும், டீசலின் விலையில் மாற்றமின்றி, லிட்டருக்கு ரூ.60.02ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது.

இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக வருவதால், பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில் பெட்ரோலின் விலை 3 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.70.90ஆகவும், டீசலின் விலையில் மாற்றமின்றி, லிட்டருக்கு ரூ.60.02ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

பெட்ரோலை பொருத்தவரை கடந்த அக்டோபர் 4ஆம் தேதியன்று ஒரு லிட்டர் 70ரூபாய் 85 பைசாவாக விற்பனை செய்யப்பட்டது. 11 நாளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 பைசா உயர்ந்துள்ளது.

டீசலைப் பொருத்தவரை கடந்த 4ஆம் தேதியன்று 59 ருபாய் 89 பைசாவாக இருந்தது. 11 நாட்களில் 13 பைசா அதிகரித்துள்ளது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Current, Latest Petrol Diesel Price in Chennai.Get the Latest Chennai Petrol and diesel price.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற