பாஜகவை போல சிபிஎம் பொலிட் பீரோவில் இருந்து 75 வயது சீனியர்கள் அவுட்!மத்திய குழுவில் 30 புதுமுகங்கள்!
மதுரை: பாஜகவைப் போல சிபிஎம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட்) கட்சியின் பொலிட் பீரோவில் இருந்து 75 வயதை கடந்த சீனியர்கள் மாற்றப்பட்டு புதுமுகங்கள் இடம் பெற்றுள்ளனர். சிபிஎம்-ன் மத்திய குழுவில் 30 புதுமுகங்கள் இடம் பெற்றுள்ளனர். சிபிஎம் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவராக தமிழகத்தின் ஜி.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மதுரையில் சிபிஎம் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டின் சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளராக கேரளாவைச் சேர்ந்த எம்.ஏ. பேபி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிபிஎம் கட்சியின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட பொலிட்பீரோ- அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களாக மொத்தம் 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்; பினராயி விஜயன், எம்.ஏ. பேபி, பி.வி. ராகவலு, தபன்சென், நிலோத்பல்பாசு, ஏ. விஜயராகவன், முகமது சலீம், அசோக் தாவ்லே, ராமச்சந்திர தோம், எம்.வி. கோவிந்தன், ஜிதேந்திர சவுத்ரி, கே. பாலகிருஷ்ணன், உ.வாசுகி, அம்ரா ராம், ஸ்ரீதீப் பட்டாச்சார்யா, விஜூ கிருஷ்ணன், மரியம் தாவ்லே. ஆர்.அருண் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
விடுவிக்கப்பட்ட முன்னணி தலைவர்கள்
பொலிட் பீரோவில் இருந்து முன்னாள் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் , பிருந்தா கார்த், எஸ்கே மிஸ்ரா, சுபாஷினி அலி, மாணிக் சர்க்கார், ஜி. ராமகிருஷ்ணன் ஆகிய முன்னணி தலைவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே 75 வயதை கடந்தவர்கள் என்பதால் பாஜகவைப் போல சிபிஎம்-ன் அதிகாரமிக்க பொலிட் பீரோவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் 79 வயதாகும் பினராயி விஜயனுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு சிபிஎம் கட்சியின் கண்ணூர் மாநாட்டில்தான், மத்திய குழு மற்றும் பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கான அதிகபட்ச வயது 75 என தீர்மானிக்கப்பட்டது.
சிபிஎம் கட்சியின் மத்தியக் குழு 85 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் ஒரு இடம் மட்டும் தேர்வு செய்யப்படவில்லை. மதுரை மாநாட்டில் மொத்தம் 84 மத்திய குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த 84 பேரில் 30 பேர் புதுமுகங்கள்; 54 பேர் ஏற்கனவே மத்திய குழு உறுப்பினராக இருப்பவர்கள். இந்த புதிய மத்திய குழுவில் பெண்களின் பிரதிநிதித்துவ விகிதம் 20%. சிபிஎம் கட்சியில் பெண்களுக்காக பிரதிநிதித்துவம் குறைந்தபட்சம் 20% இருக்க வேண்டும் என்பது விதி. இதனை மதுரை மாநாடு அமல்படுத்தி உள்ளது.
சிபிஎம் கட்சியின் இந்த மத்தியக்குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, பி. சம்பத், பெ.சண்முகம், என்.குணசேகரன், கே. பாலபாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சிறப்பு அழைப்பாளர்கள்
75 வயதை கடந்தவர்கள் என்பதால் பொலிட் பீரோவில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் மாணிக் சர்க்கார், பிரகாஷ் காரத், பிருந்தா காரத், சுபாஷினி அலி எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, பிமன் பாசு, ஹன்னன் முல்லா ஆகியோர் மத்திய குழுவின் சிறப்பு அழைப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவராக ஜி. ராமகிருஷ்ணன்
மேலும் சிபிம் கட்சியின் மத்தியக் கட்டுப் பாட்டுக் குழுவின் தலைவராக தமிழ்நாட்டின் ஜி.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் எம்.விஜயகுமார், யு.பசவராஜூ, ராபின் தேவ், ஜோகேந்திர சர்மா, ரமாதாஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் களத்தில் சிபிம்
2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 44 இடங்களில் வென்றிருந்தது சிபிஎம் கட்சி. ஆனால் 2009-ம் ஆண்டு 16 இடங்களில்தான் சிபிஎம் கட்சியால் வெல்ல முடிந்தது. 2014-ல் இந்த எண்ணிக்கை 9 ஆக குறைந்தது; 2019-ம் ஆண்டு மேலும் பலவீனமடைந்து வெறும் 3 எம்பிக்கள் மட்டுமே சிபிஎம் கட்சிக்கு லோக்சபாவில் இருந்தனர். தற்போதைய லோக்சபாவில் சிபிஎம் கட்சிக்கு 4 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள் 2 பேர். இதர எம்பிக்கள் கேரளா, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள், அதேநேரத்தில் சிஎபிம் கட்சியின் கோட்டைகளாக இருந்த திரிபுரா, மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து சிபிஎம் கட்சிக்கு ஒரு எம்பி கூட இல்லை என்பது வரலாற்று துயரம்.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications