For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத் தேர்தல்: விஜயகாந்த், பிரேமலதா சென்னையில் போட்டியிட விருப்ப மனு

By Mayura Akilan
|

டெல்லி: ‘‘நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சென்னை தொகுதிகளில் போட்டியிட ஏராளமானோர் விருப்பமனு அளித்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் தே.மு.தி.க. வினர் 23.01.2014 வியாழக்கிழமை முதல் விருப்ப மனு கொடுக்கலாம்'' என்று அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருந்தார்.

பொதுத் தொகுதிக்கு ரூ.20 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.10 ஆயிரம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை பிப்ரவரி 1-ம் தேதி மாலை 6 மணிக்குள் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

vijayakanth and premalatha

அதன்படி, சென்னை கோயம்பேடு தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் 23ம் தேதி காலை 11 மணிக்கு விருப்ப மனு வினியோகம் தொடங்கியது. தே.மு.தி.க. இளைஞர் அணி தலைவர் சுதீஷ் இதை தொடங்கி வைத்தார்.

விருப்ப மனுக்களை வாங்குவதற்காக காலையில் இருந்தே ஏராளமான தே.மு.தி.க.வினர் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர். விண்ணப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தவர்கள் பொது தொகுதிக்கு ரூ.20 ஆயிரமும், தனி தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும் செலுத்தினார்கள்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள், செந்தாமரை கண்ணன், வி.என்.ராஜன், யுவராஜ், ஏ.எம்.காமராஜ் ஆகியோர் மனு கொடுத்தனர்.

பிரேமலதா தென் சென்னையில் போட்டியிட வேண்டும் என தென் சென்னை மாவட்ட அவைத்தலைவர் கே.எஸ்.மலர்மன்னன் மனு கொடுத்தார்.

இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் கள்ளக்குறிச்சி, வேலூர் தொகுதிகளில் போட்டியிட விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் மனு கொடுத்தார்.

பல்வேறு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக தே.மு.தி.க. வினர் 184 பேர் விருப்ப மனு கொடுத்தனர்.

dmdk

தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள், சந்திரகுமார், நல்ல தம்பி, சி.எச்.சேகர், பாபு, முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

English summary
Gearing up for the 2014 general elections, the DMDK party on Thursday begin the sale of its election application forms for candidates priced at Rs 20,000.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X