தனிக் கட்சி ஆரம்பிக்கும் கமலுக்கு ஸ்டாலின் கொடுத்த வாழ்த்து.. "டிப்ளமேட்டிக் மூவ்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நான் அரசியலுக்கு வந்து விட்டேன்... வெளியே போகமாட்டேன் - கமல் பளிச்!- வீடியோ

  சென்னை: கமல்ஹாசன் தனித்து கட்சி ஆரம்பிப்பதாக கூறியபோதிலும் அவருக்கு அன்பிற்கினிய என்று குறிப்பிட்டு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

  கமல் தமிழக அரசில் நடைபெறும் ஊழல் குறித்து பேசத் தொடங்கியபோதெல்லாம் அதன் பின்னால் திமுக இருந்து இயக்குவதாக பேசப்பட்டது. அதேபோல் முரசொலி விழாவில் தற்காப்பை விட தன்மானமே முக்கியம் என்று ரஜினி குறித்து கமல் விமர்சித்தபோதும் இதன் பின்னால் திமுக இருக்கிறது என்றுதான் பரவலாக பேசப்பட்டது.

  கமல் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. அவர் அரசியலுக்கு வந்து கேட்கட்டும் நாங்கள் பதில் கூறுகிறோம் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்,. இருந்தாலும் விடாமல் கமல் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

   கட்சி தொடக்கம்

  கட்சி தொடக்கம்

  தனிக்கட்சி தொடங்குவதில் உறுதியாக உள்ளேன் என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் கமலை யாரும் இயக்கவில்லை என்பதையும் அவர் வெளிப்படுத்திவிட்டார்.

  ஸ்டாலின் வாழ்த்து

  இன்று பிறந்தநாள் காணும் கமல்ஹாசனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், அன்பிற்கினிய நண்பர் 'கலைஞானி' @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ விழைகிறேன் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

  பிறந்தநாள்

  பிறந்தநாள்

  தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாக கமல் அறிவித்த போதிலும் அதில் எந்த வித அதிருப்தியும் கொள்ளாமல் கமலுக்கு அன்பிற்கினிய என்று தொடங்கியே மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகளை கூறியுள்ளார். இதுதான் ஆரோக்கியமான அரசியலாக பார்க்கப்படுகிறது.

   அதிருப்தி இல்லை

  அதிருப்தி இல்லை

  முரசொலி விழாவில் கமல் பேசியபோது தன்னை திமுக இணைந்து கொள்ளுமாறு திமுக தலைவர் கருணாநிதி தனக்கு கடிதம் எழுதியிருந்ததாகவும், அதற்கு தான் எந்த வித பதிலையும் அளிக்கவில்லை என்றும் கமல் பேசினார். எனினும் கமல் மீது கருணாநிதி பற்றாகவே இருந்தார். அதுபோல் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்த நிலையிலும் தந்தையை போல் மு.க. ஸ்டாலினும் டிப்ளமேட்டிக்காக கமலை வாழ்த்தியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  DMK Working President M.K.Stalin calls Dear and loveable Kamalhassan in birthday wishes which was given in twitter.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற