சினிமா வாய்ப்புக்கு ரிகர்சல்.. மக்களை முட்டாளாக்க தீபா கணவர் மாதவன் நடத்திய பலே நாடகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மாதவன் தான் டிராமா செய்ய சொன்னார்-டுபாக்கூர் ஐடி அதிகாரி- வீடியோ

  சென்னை: சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி ஹோட்டல் உரிமையாளரை தீபாவின் கணவர் ஐடி அதிகாரியாக நடிக்க வைத்தது அம்பலமாகியுள்ளது.

  தீபாவின் வீட்டில் கடந்த சனிக்கிழமை போலி வருமான வரித்துறை அதிகாரி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  தப்பியோடிய போலி ஐடி அதிகாரியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரியாக நடித்த நபர் போலீஸில் சரணடைந்துள்ளார்.

  ஹோட்டல் ஓனர்

  ஹோட்டல் ஓனர்

  அவர் வருமான வரித்துறை அதிகாரியாக நடித்தது குறித்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அதாவது தனது பெயர் பிரபாகரன் என்றும் எம்பிஏ பட்டதாரியான தான் சொந்தமாக விழுப்புரத்தில் ஹோட்டல் நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

  வெறும் டெஸ்ட்தான்

  வெறும் டெஸ்ட்தான்

  தனது ஹோட்டலுக்கு சில மாதங்களுக்கு முன்பு சாப்பிட வந்த மாதவன் தன்னை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி தனது புகைப்படத்தை அனுப்ப சொன்னதாகவும், பின்னர் தனது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிபோல் நடிக்கவேண்டும் என்ற அவர் இதுவெறும் டெஸ்ட்தான் என்றார்.

  தப்பியோட சொன்னதும் அவரே

  தப்பியோட சொன்னதும் அவரே

  இதற்காக போலி அடையாள அட்டை மற்றும் சர்ச் வாரண்ட் ஆகியவற்றை தனக்கு முன்கூட்டியே கூரியரில் அனுப்பியதாகவும் தெரிவித்தார். மேலும் போலீசார் வந்தவுடன் தன்னை தப்பித்து ஓட சொன்னதும் அவர் தான் என்றும் பிரபாகரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

  ஓட வைத்த மாதவன்

  ஓட வைத்த மாதவன்

  கட்டிய மனைவியிடம் இருந்து பணத்தை பறிக்க கணவர் மாதவன் வருமான வரித்துறை ரெய்டு செட்டப் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா ஆசையில் இருந்த ஒருவரை தனது திட்டத்திற்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவரை தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட வைத்துள்ளார் மாதவன்.

  சந்தேகம் வரவில்லை

  சந்தேகம் வரவில்லை

  ஆனால் அப்போதே செய்தியாளர்கள் சந்தேகம் எழுப்பியதற்கு தனக்கு எதுவும் தெரியாது என சாதித்தார் அவர். மேலும் அந்த நபர் அடையாள அட்டையை காண்பித்ததால்தான் அனுமதித்தேன் என்றும் தனக்கு சந்தேகம் வரவில்லை என்றும் கூலாக கூறினார் மாதவன்.

  மக்களை முட்டாளக்க நாடகம்

  மக்களை முட்டாளக்க நாடகம்

  ஏற்கனவே தனது பேரவை தொண்டர்களை வைத்து வீட்டின் மீது கல்லெறிய வைத்தனர் கணவன் மனைவியான மாதவனும் தீபாவும் நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். தற்போது மாதவன் இப்படி ஒரு நாடகத்தை நடத்தி மக்களை முட்டாளாக்கியுள்ளார். பணத்திற்காக கணவன் மனைவி அரங்கேற்றும் நாடகங்கள் மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Deepa's husband Madhavan only arranged the IT raid Drama on saturday. He used a person who is interested in acting as cinema rehearsal. Deepa and Madhavan's drama creats anger among the people.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற