மடிப்பாக்கத்தில் முழங்கால் அளவு வெள்ளம்.. வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையை மிரட்டிய மழை: குளமான சாலைகள்...ஸ்தம்பித்த வாகனங்கள்- வீடியோ

  சென்னை: சென்னை மடிப்பாக்கம் பகுதியில் வீட்டுக்கு வெளியே முழங்கால் அளவுக்கு தெருக்களில் மழை நீர் தேங்கி இருப்பதால் வீடுகளை விட்டு வர முடியாமல் மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனராம்.

  சென்னையிலும் புறநகர்களிலும் வட கிழக்குப் பருவ மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை ஒரே நாளில் ஸ்தம்பித்துப் போயுள்ளது.

  Madippakkam needs attention from officials

  இதில் சிக்கி பாதிப்புக்குள்ளாகியுள்ள நமது வாசகர்கள் தங்களது பாதிப்பு குறித்த தகவல்களை அளித்து வருகின்றனர். அந்த வகையில் நமது மடிப்பாக்கம் வாசகர் எம்.பாலமுருகன் நமக்கு அனுப்பி வைத்துள்ள தகவல்.

  Madippakkam needs attention from officials

  மடிப்பாக்கம் எல்ஐசி நகர் முதலாவது மெயின் ரோட்டில் வசித்து வருகிறேன். இங்கு தெருவில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. நேற்று பிற்பகலிலிருந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது.

  Madippakkam needs attention from officials

  வீ்ட்டை விட்டு வெளியே போக முடியவில்லை. உரியவர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசகர் பாலமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார். தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம்.

  Madippakkam needs attention from officials

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Our reader M Balamurugan who is re residing in 1st main road, LIC Nagar, Madipakkam sayd that Water is there in knee level in his street. It's there from yesterday noon, wants to get rid of this soon.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற