For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சி மாநாடு- மோடி பங்கேற்க தடை இல்லை: மதுரை ஹைகோர்ட் கிளை தீர்ப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

Madurai HC bench dismiss the plea against Modi's Trichy meet
மதுரை: திருச்சியில் நடைபெற உள்ள பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி மாநாட்டில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பங்கேற்க தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் மோடியை திருச்சி கூட்டத்தில் பேச அனுமதித்தால் அவர் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேச வாய்ப்பு இருக்கிறது. இதனால் திருச்சியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மோடிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இம்மனு இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், வேணுகோபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், நரேந்திர மோடி பங்கேற்கும் திருச்சி கூட்டத்துக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநாடும் கண்காணிக்கப்படுகிறது என்று
விளக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நரேந்திர மோடி பங்கேற்கும் மாநாட்டுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

English summary
The Madras High court's Madurai bench today dismissed the plea against that the BJP Prime Minister Candidate Narendra Modi Trichy Visit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X