மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்துக்கு காரணம் ‘சதி‘.. பொன். ராதாகிருஷ்ணன் கண்டுபிடிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்துக்கு காரணம் சொன்ன பொன் ராதாகிருஷ்ணன்- வீடியோ

  மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு காரணம் சதித்திட்டமே காரணம் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  மத்திய இணை அமைச்சரான பொன் ராதாகிருஷ்ணன் தீ விபத்து ஏற்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதற்கு சதித்திட்டமே காரணம் என குற்றம்சாட்டினார்.

  Madurai Meenakshi Amman temple fire accident reason is the conspiracy: Pon Radhakirshnan

  தீ விபத்திற்கான உண்மை காரணத்தை விரைவில் கண்டறிய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் சட்டசபையில் ஜெயலலிதா படத்திறப்பை வைத்து திமுக அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

  அமைச்சர்கள் அடிக்கடி சமாதிக்குப் போவதை நிறுத்திக்கொண்டால் ஜெயலலிதாவின் மாண்பு காக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Minister of State Pon Radhakirshnan has said that Madurai Meenakshi Amman temple fire accident reason is the conspiracy, said the Minister of Coal Minister Ponnar Radhakrishnan.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற