For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்கள் நல கூட்டணியால் அதிமுகவுக்கு தான் பாதிப்பு? நினைத்தது ஒன்று, நடப்பது வேறோ??!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக வெற்றிக்கு உதவும் என்று நினைக்கப்பட்ட மூன்றாவது அணியால், அக்கட்சிக்கு பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது என்பது, நியூஸ்-7 கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

அதிமுக எப்போதுமே பலமாக காணப்படும் மேற்கு மண்டலத்திலுள்ள தொகுதிகளில் நடத்தப்பட்ட இக்கருத்து கணிப்பில் திமுகவிற்கு 33 தொகுதிகளும் அதிமுகவிற்கு 24 தொகுதிகளும்தான் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மண்டலத்தின் பல தொகுதிகளில் பாமக அல்லது மக்கள் நல கூட்டணி 3வது இடத்தை பிடிக்கிறது. பாஜக கணிசமாக எழுச்சியடைந்துள்ளது.

திமுகவுக்கு பலம்

திமுகவுக்கு பலம்

வாக்கு சிதறுவதால் ஆளும் கட்சிக்கு லாபம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் நல கூட்டணி, பாமக, பாஜக என வாக்குகள் சிதறியபோதிலும் திமுகவுக்கு ஆதரவாகவே கருத்துக் கணிப்பு முடிவுகள் அமைந்துள்ளன.

புறக்கணித்த ஜெயலலிதா

புறக்கணித்த ஜெயலலிதா

இதில், இ.கம்யூனிஸ்ட் கட்சி தொடக்கம் முதல் அதிமுகவோடு கூட்டணி சேர ஆசைப்பட்டது. பாஜகவும் கடைசிவரை பிரயத்தனப்பட்டது. வாசனின், தமிழ் மாநில காங்கிரசும் கடும் முயற்சி எடுத்தது. ஆனால் இக்கட்சிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணித்தது அதிமுக.

பாஜக பலம்

பாஜக பலம்

இப்போது, இதுதான் பெரும் பாதிப்பை அதிமுகவுக்கு ஏற்படுத்தியுள்ளது. உதாரணத்திற்கு மேற்கு மண்டலத்திலும், அதுவும் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பாஜக கணிசமாக வாக்குகள் பெற்றுள்ளது. சில தொகுதிகளில் அதிகபட்சமாக 9 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

வர வேண்டிய வாக்குகள்

வர வேண்டிய வாக்குகள்

ஒருவேளை பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்தால் அந்த வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு கிடைத்திருக்கும். ஏனெனில் பாஜக மற்றும் அதிமுக இரு கட்சிகளுமே வலதுசாரி கொள்கைகள் கொண்டவை என்பதே மக்கள் எண்ணம். எனவே அதிமுகவுக்கு வர வேண்டிய வாக்குகளைத்தான் பாஜக பிரிக்கிறது என்பதும் உண்மை.

பாமக வாக்குகள்

பாமக வாக்குகள்

அதோடு, கொஞ்சம் பேசி ராமதாஸ் மனதை மாற்றி, பாமகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்தால், வடமேற்கு பகுதிகளான கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் திமுகவை வெகுதொலைவில் நிறுத்தி அதிமுக கூட்டணி அதிக வாக்கு சதவீதம் பெற்றிருக்க முடியும்.

ஆசைப்பட்ட கம்யூனிஸ்ட்

ஆசைப்பட்ட கம்யூனிஸ்ட்

மக்கள் நல கூட்டணியிலுள்ள இ.கம்யூனிஸ்ட், தமிழ் மாநில காங்கிரசாரின் விருப்பத்தின்படி அதிமுக அவர்களோடு கூட்டணி வைத்திருந்தார், திருப்பூர் உள்ளிட்ட தொழிலாளர் பெருக்கம் கொண்ட மண்டலங்களில் வாக்கு சிதறாமல் அதிமுகவுக்கு கிடைத்திருக்கும்.

சில தொகுதிகளில் பலம்

சில தொகுதிகளில் பலம்

மக்கள் நல கூட்டணியிலுள்ள சில கட்சிகள், பாமக, பாஜக போன்ற கட்சிகள் சிதறிக்கிடப்பது, உண்மையிலேயே இப்போது அதிமுகவுக்குத்தான் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில தொகுதிகளில்தான், திமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளை ம.ந.கூட்டணி பிரித்துள்ளது, இக்கருத்து கணிப்பு மூலம் ஊர்ஜிதமாகிறது.

நினைதது ஒன்று, நடந்தது ஒன்று

நினைதது ஒன்று, நடந்தது ஒன்று

எனவே மக்கள் நல கூட்டணியால் நமக்கு நல்லது நடக்கும் என்று ஜெயலலிதா நினைத்திருந்த நிலை மாறி, அவருக்கு எதிராக போய்விட்டது. இதுதான் நினைத்தது ஒன்று நடந்தது மற்றொன்று என்று கூறுவார்கள் போலும்.

English summary
Makkal nala koottani split the votes and DMK get the benefit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X