மக்கள் நலக் கூட்டியக்கம் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது... ஏர்போர்ட்டில் இருந்து தமிழிசை
சென்னை: தேர்தல் நேரத்தில் மக்கள்நலக் கூட்டியக்கத்தில் யார், யார் இருப்பார்கள் என்பதை கூற முடியாது, அந்த கூட்டியக்கம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தாது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மக்கள்நலக் கூட்டியக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இதன் ஒருங்கிணைப்பாளராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் அதிமுக, திமுக அல்லாத ஆட்சி மாற்றத்தினை மக்கள் நல கூட்டியக்கம் ஏற்படுத்தும் என வைகோ கூறிவருகிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டியக்கம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தாது என பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பாஜக பெரும் சக்தியாக செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசு மக்கள் நலத் திட்டங்களை முறையாக செயல்படுத்தவில்லை, மக்கள்நலக் கூட்டியக்கம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தாது, தேர்தல் நேரத்தில் கூட்டியக்கத்தில் யார், யார் இருப்பார்கள் என்பதை கூற முடியாது.
மனிதநேய மக்கள் கட்சியைக் காப்பாற்றும் பணியில் ஜவாஹிருல்லா ஈடுபட வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications