For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"அம்மா"வுக்குப் பிடித்த "110"ஐ பெற்ற மக்கள் நலக் கூட்டணி.. ஆளுக்கு எத்தனை.. வீரலட்சுமிக்கும் உண்டா?

Google Oneindia Tamil News

சென்னை: 110 என்றாலே ஜெயலலிதாதான் நினைவுக்கு வருவார். இனி மக்கள் நலக் கூட்டணியும் நினைவுக்கு வரும். காரணம் இந்தப் பிரபலமான எண்ணின் எண்ணிக்கையில்தான் மக்கள் நலக் கூட்டணி சட்டசபைத் தேரத்லில் போட்டியிடவுள்ளது. தற்போது தங்களுக்குள் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுக்களை தீவிரப்படுத்தியுள்ளதாம் மக்கள் நலக் கூட்டணி.

மக்கள் நலக் கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய நான்கு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது தவிர கி. வீரலட்சுமியின் தமிழர் முன்னேற்றப் படையும் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதில் யார் யாருக்கு எத்தனை சீட்டை பங்கிட்டுக் கொள்வது என்பது குறித்து தற்போது ஆலோசனை நடந்து வருகிறதாம்.

MDMK may contest in 40 seats

பெரியண்ணன் மதிமுக

இந்த நால்வர் அணியில் பெரிய கட்சியாக கருதப்படுவது மதிமுகதான். எனவே அந்தக் கட்சிக்கே அதிக சீட் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. அதாவது 40 சீட் வரை அந்தக் கட்சிக்கு தரப்படும் என்று தெரிகிறது.

இரு கம்யூனிஸ்டுகளுக்கும் 35

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மொத்தமாக 35 ஒதுக்கப்பட்டு அதில் 18 தொகுதிகள் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், மீதமுள்ள 17 சீட்டுகளும் ஒதுக்கப்படக் கூடும். அல்லது மார்க்சிஸ்ட் கூடுதலாக எடுத்துக் கொண்ட மிச்சமிருப்பதை சிபிஐக்குத் தரலாம்.

விடுதலைச் சிறுத்தைகளுக்கு 35

அதேபோல விடுதலைச் சிறுத்தைகளுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. கடைசி நேரத்தில் இதில் மாற்றம் வந்தாலும் வரக் கூடும்.

அப்ப வீரலட்சுமிக்கு?

English summary
The PWF has been allotted 110 seat and MDMK may contest in 40 seats from them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X