நிரம்பிய மேட்டூர் அணை.. தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக்கிய ஆலோசனை!

சென்னை: மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வேகமாக அதிகரித்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்ததை முன்னிட்டு கடந்த 19ஆம் தேதி காவிரி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் அணையிலிருந்து சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று தனது முழுகொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனை முன்னிட்டு காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
பேரிடர் மேலாண்மை குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோனை நடத்தினார். அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் விளக்கம் அளித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!