மேட்டூர் அணை 100ஐத் தொட்டு ஒரு வருஷமாச்சு.. !

மேட்டூர் அணை 100 அடியைத் தொட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. இதைத் தொடர்ந்து தற்போது அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பதால் 100 அடியை தொடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காவிரியில் அதிகரிக்கும் நீர் வரத்து... 100 அடியை எட்டும் மேட்டூர் அணை

    மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அபரிமிதமாக இருப்பதால் இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் அது 100 அடியைத் தொடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் உற்சாகத்துடன் காத்துள்ளனர்.

    கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில் ஹேரங்கி, கபிணி அணைகள் நிரம்பி விட்டன. உபரி நீர் தொடர்ந்து திறந்து விடப்படுகிறது. ஹேமாவதி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளும் நிரம்பும் நிலைக்கு வந்து விட்டன.

    இதனால் கர்நாடகத்தின் அனைத்து அணைகளுக்கும் வரும் காவிரி நீர் அப்படியே தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் 10 நாட்களில் அணை நிரம்பும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    தமிழகத்தில் மழை

    தமிழகத்தில் மழை

    அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் தமிழகத்திலும் மழை பெய்து வருகிறது என்பதால் மக்கள் மகிழ்வுடன் உள்ளனர்.

    100 அடியை எட்டும்

    100 அடியை எட்டும்

    120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்னும் ஐந்தே நாட்களில் 90 அடியை எட்டிவிடும். இதைத் தொடர்ந்து மேலும் 2 தினங்களில் 100 அடியை எட்டும்.

    இந்த ஆண்டும் எட்டுகிறது

    இந்த ஆண்டும் எட்டுகிறது

    இதேபோல் போன வருடம் அக்டோபரில் மேட்டூர் அணை 100 அடியைத் தொட்டது. அதற்குப் பிறகு இப்போதுதான் அந்த கொள்ளளவை தொடப் போகிறது. கடந்த ஆண்டுக்கு முந்தைய காலங்களில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலேயே அணை 100 அடியை எட்டிவிடும்.

    விவசாயிகள் மகிழ்ச்சி

    விவசாயிகள் மகிழ்ச்சி

    ஆனால் கடந்த ஆண்டு பருவமழை தாமதமாக பெய்ய தொடங்கியதால் அக்டோபரில் 100 அடியை எட்டுகிறது. இந்த முறை இன்னும் முன்னரே அதாவது ஜூலை மாதத்திலேயே அணை 100 அடியை எட்டவுள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+