பி.இ. படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் அன்பழகன்
பி.இ. படிப்புக்கான தர வரிசை பட்டியலை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பி.இ. படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது
சென்னை: பி.இ. படிப்புக்கான தர வரிசை பட்டியல் இன்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.
2018-19-ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.

அதில் பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த 1,59, 631 பேரில் 1,04, 453 பேருக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,76,875 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கீர்த்தனா ரவி முதலிடத்தை பெற்றார். ரித்வீக், ஸ்ரீ வர்ஷினி ஆகியோர் முறையே 2 மற்றும் 3ஆவது இடத்தை பெற்றுள்ளனர். தரவரிசை பட்டியலில் 10 பேர் 200-க்கு 200 பெற்றுள்ளனர்.
தரவரிசைப் பட்டியலில் தவறிருந்தால் திருத்திக் கொள்ள ஒரு வார கால அவகாசம் அளிக்கப்படுகிறது. நடப்பாண்டில் 26 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்றார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications