For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடர் கன மழை எச்சரிக்கை எதிரொலி.. அதிகாரிகளுடன் அமைச்சர் உதயக்குமார் அவசர ஆலோசனை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் சென்னையில் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார்.

Minister dicusses with officials on heavy rain

வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் நாளை முதல் மீண்டும் கன மழை பெய்யும், ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் கன மழை இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. இந்த நிலையில், இன்று மாநில வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்குச் சென்று அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கடலோர மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

English summary
Tamil Nadu revenue Minister Udayakumar hold dicussion with officials on expected heavy rain in coming days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X