ஆன்மீக சுவாமிகள் மலையேறிவிட்டார்- அமைச்சர் கிண்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரஜினி இமயமலை சென்றதை கிண்டல் செய்த அமைச்சர் ஜெயக்குமார்- வீடியோ

  சென்னை: ரஜினியின் இமயமலை பயணம் குறித்த கேள்விக்கு ஆன்மீக சுவாமிகள் மலையேறிவிட்டார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

  15 நாட்கள் பயணமாக ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டார். கிட்டதட்ட 8ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது ஆன்மீக குருமார்களை சந்திக்கவுள்ளதாக ரஜினி கூறியிருந்தார்.

  Minister Jayakumar says that Spiritual leader goes to Himalayas

  இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்காக டெல்லி செல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜிஎஸ்டியினால் மாநில நலன் பாதிக்கப்படவில்லை. மாறாக மாநிலத்தின் வருவாய் பெருகியுள்ளது.

  இன்றைய கூட்டத்தில் வர்த்தகர்களின் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது என்றார். அவரிடம் ரஜினியின் இமயமலை பயணம் குறித்து கேட்டபோது ஆன்மீக சுவாமிகள் மலையேறிவிட்டார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Minister Jayakumar criticises Rajinikanth's Himalayan journey. When Jayakumar goes to GST Council Meeting, he meets reporters in Chennai Airport.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற