நீர் ஆவியாகமல் தடுக்க செல்லூர் ராஜு மேற்கொண்ட அடடே பிளான் புஸ்ஸ்ஸ்...!!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எடுத்துள்ள புதுமுயற்சி தோல்வியடைந்துள்ளது. நீரின் மேல் போடப்பட்ட தெர்மாகோல்கள் அனைத்தும் கரை ஓதுங்கியுள்ளது.

வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகமல் தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டார். அதன்படி அணையில் உள்ள நீரின் மீது தெர்மாகோல்கள் கொண்டு போர்த்தப்பட்டது.

Minister Sellur Raju plan to stop the evaporation of water in Vaigai dam

இந்நிலையில் போர்த்தப்பட்ட தெர்மாகோல்கள் அனைத்தும் அமைச்சரின் திட்டத்துக்கு மாறாக கரை ஒதுங்கியுள்ளது. இதுதொடர்பாக அவர் கூறியதாவது, கடந்த 142 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இந்த கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

இதனால், அணைகளில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அணைகளில் உள்ள நீர் நிலைகள் மேல் தெர்மாகோல் அட்டைகளை கொண்டு மூடுவது. இதன் மூலம் நீர் ஆவியாமல் தடுக்கப்படும்.

இதுபோல் ஏற்கெனவே வெளிநாடுகளில் இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த திட்டத்துக்கு 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 200 சதுர அடிக்கு வைகை அணையில் உள்ள நீர் மேல் தெர்மாகோல் போடப்பட்டது' என்றார்.

ஆனால் மூடப்பட்ட அனைத்து தெர்மா கோல்களும் போடப்பட்ட சில நிமிடங்களிலேயே காற்றின் வேகத்தால் கரை ஒதுங்கியது. இதனால் அமைச்சரின் திட்டம் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Sellur Raju plans to stop the evaporation of the water in the Vaigai dam. But the plan became failure.
Please Wait while comments are loading...