உடல்நலக்குறைவு.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திடீர் சுகவீனம் காரணமாக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. சுகவீனம் அப்படியே இருப்பதால், அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

Minister Welampani Natarajan has been admitted in Apollo hospital

அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு ஏற்பட்டுள்ள உடல் நல பாதிப்பு குறித்தும், என்ன மாதிரி சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கண் புரை பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முதல்வரை ஓய்வெடுக்க டாக்டர்கள் அட்வைஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tourism Minister Welampani Natarajan has been admitted in Apollo hospital due to sudden illness.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற