திமுகவினர் பணத்துக்கு சோரம் போனதாக சொல்வதா? துரைமுருகனுக்கு அழகிரி கண்டனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  திமுக செயல்தலைவராக ஸ்டாலின் இருக்கும் வரை தேர்தலில் ஜெயிக்காது- வீடியோ

  சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுகவினர் பணத்துக்கு சோரம் போனதாக துரைமுருகன் கூறியுள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக தோற்றது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அழகிரி அளித்த பேட்டி:

  ஆர்.கே.நகரில் தினகரன் தொடக்கம் முதலே தினகரன் களப்பணியாற்றி வருகிறார். திமுகவினர் களப்பணியாற்றவில்லை.

  கருணாநிதி திடீர் விசிட்

  கருணாநிதி திடீர் விசிட்

  வெளிமாவட்டங்களில் இருந்து திமுகவினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் வேலை செய்கிறார்களா? இல்லையா என நள்ளிரவில் கருணாநிதி போய் பார்ப்பார்.

  உழைப்பும் இருந்தது

  உழைப்பும் இருந்தது

  ஆனால் அப்படி ஆர்.கே.நகரில் செய்யவில்லையே. வேனில் நின்றபடி வாக்கு கேட்டால் ஓட்டு போட்டுவிடுவார்களா? திருமங்கலத்தில் பணம் மட்டுமல்ல அனைத்து கட்சியினரது உழைப்பும் இருந்தது.

  பணம் தின்றதாக கூறுவதா?

  பணம் தின்றதாக கூறுவதா?

  உழைத்தால்தான், களப்பணியிருந்தால்தான் தேர்தலில் ஜெயிக்க முடியும். திமுக வாக்குகள் எங்கே என்றால் பணம் தின்றுவிட்டது என துரைமுருகன் கூறுகிறார்.

  அவதூறான கருத்து

  அவதூறான கருத்து


  அப்படியானால் திமுக தொண்டர்கள் பணத்துக்கு சோரம் போனவர்கள் என்று அர்த்தமா? திமுக தொண்டர்களை பார்த்து இப்படிச் சொல்லலாமா? திமுகவின் உண்மையான தொண்டர்கள் மனநிலை எப்படி இருக்கும்?

  இவ்வாறு அழகிரி கூறினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Former Union Cabinet Minister MK Azhagiri has strongly condemned the Duraimurugan's comments against DMK Cadres on RK Nagar By election results.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற