மூத்த கம்யூ. தலைவர் தா.பாண்டியனை நேரில் சந்தித்தார் ஸ்டாலின்.. நலம் விசாரித்தார்
தா.பாண்டியனை மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.
Recommended Video

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் மாநில செயலாளருமான தா.பாண்டியனுக்கு 85 வயதாகிறது. சமீப காலமாக சிறுநீரக பிரச்சினைக்காக இவர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற தா.பாண்டியன். ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இயற்கை கருணாநிதியை அழைத்து செல்ல போராடுகிறது.. கருணாநிதி உயிருக்காக போராடவில்லை"என்றவர், அவர் நீடுடி வாழ்வார்" எனவும் வாழ்த்தினார்.
இந்நிலையில், நேற்று காலை தா.பாண்டியனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, உடனடியாக அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து தா.பாண்டியனுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். இதையடுத்து பிற்பகலில் அவரது உடல்நலம் ஓரளவு தேறியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே, ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் அவரது கட்சி நிர்வாகிகள் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அரசு மருத்துவமனைக்குச் சென்று தா.பாண்டியனை நேரில் சந்தித்தார். அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். ஸ்டாலினுடன் திமுக சட்டமன்ற உறுப்பினர்களான பொன்முடி, சேகர்பாபு ஆகியோரும் சென்றிருந்தனர்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் சீரியல்.. அதுவும் இதுதான் காரணமா? பீல் பண்ணும் ரசிகர்கள் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications