For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழகிரியை சந்திக்கும் ஸ்டாலின்: தற்காலிக நீக்கம் ரத்தாகிறது?

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட தனது அண்ணன் அழகிரியை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சந்திக்கவிருக்கிறார்.

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கும், அவரது சகோதரர் மு.க. அழகிரிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தேமுதிகவுடன் திமுக கூட்டணி சேரக் கூடாது என்று அழகிரி பேட்டி அளித்து கூட்டணிக்கு வேட்டு வைத்தார்.

அவரது கருத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

தற்காலிக நீக்கம்

தற்காலிக நீக்கம்

இந்த பிரச்சனைகளை அடுத்து அழகிரி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்தார்.

கருணாநிதி

கருணாநிதி

அழகிரி தன்னிடம் தனது இளைய மகன் மு.க. ஸ்டாலின் இன்னும் 3 மாதங்களில் இறந்துவிடுவார் என்று கூறியதாக கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கொடும்பாவி எரிப்பு

கொடும்பாவி எரிப்பு

பல்வேறு இடங்களில் அழகிரியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. பிறந்தவர்கள் இறக்கத் தான் வேண்டும் அதனால் அண்ணனின் உருவ பொம்மைகளை எரிக்க வேண்டாம் என்று ஸ்டாலின் கட்சிக்காரர்களை கேட்டுக் கொண்டார்.

சந்திப்பு

சந்திப்பு

திமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமணம் மதுரையில் நடக்கிறது. இதற்காக ஸ்டாலின் வரும் 9ம் தேதி மதுரை செல்கிறார். அன்று அவர் மதுரையில் இருக்கும் அழகிரியின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசுகிறார்.

நீக்கம் ரத்து?

நீக்கம் ரத்து?

அப்போது அவர் திருச்சியில் நடக்கும் திமுக மாநில மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழகிரிக்கு அழைப்பு விடுக்கவிருக்கிறார். இந்த சந்திப்பிற்கு பிறகு அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

English summary
DMK treasurer MK Stalin will meet his elder brother Azhagiri, who got suspended from the party, on february 9.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X