தம்பிதுரை, விஜயபாஸ்கர் மீது காவல்துரையில் புகார் அளித்த செந்தில் பாலாஜி - வீடியோ
கரூர் குப்பிச்சிபாளையத்தில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை கட்டுவதை தம்பிதுரை மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தடுக்கிறார்கள் என அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி காவல்துறையில் புகார் அளித
கரூர்: லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கரூர் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது அதிமுகவுக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி. இவர் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத் துறை விஜயபாஸ்கர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், ' தம்பிதுரையும் விஜயபாஸ்கரும் கரூர் குப்பிச்சிபாளையத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதைத் தடுக்கிறார்கள்.வேறு இடத்தில் அரசு மருத்துவமனையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இருவரையும் கண்டித்து வரும் 28ஆம் தேதி, தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளார். காவல்துறை இந்த வழக்கைப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர், தன் கட்சியினர் மீதே புகார் கொடுத்திருப்பது மிகுந்த சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications