எச். ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்... எம்எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ், அன்சாரி கூட்டறிக்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கவிஞர் வைரமுத்துவை தரம் தாழ்ந்த சொற்களால் இழிவுபடுத்திய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எம்எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளனர். எச். ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்எல்ஏ, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ, ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் : "தமிழை ஆண்டாள்" என்கிற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கட்டுரையை முன்வைத்து பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா என்பவர் தரம் தாழ்ந்த சொற்களால் அவரை இழிவுப்படுத்தியுள்ளார்.

அது மட்டுமின்றி சம்மந்தமே இல்லாமல், இத்துடன் நபிகள் நாயகத்தையும், அவர்களின் மனைவியரையும் இழிவுப்படுத்தியும், பொது அமைதியும் கெடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

பாஜக விமர்சனத்தை ஏற்க முடியாது

பாஜக விமர்சனத்தை ஏற்க முடியாது

கவிஞர் வைரமுத்து இது குறித்து தன்னிலை விளக்கம் கொடுத்துள்ள நிலையில், அவரை நெருக்கடிகளுக்கு ஆளாக்கி தொடர்ந்து பாஜகவினர் விமர்சிப்பதை ஏற்றக்கொள்ள முடியாது. வைரமுத்து தமிழ் சமூகத்தின் முகவரியில் ஒருவர் என்பதை மறந்துவிடக் கூடாது.

எச். ராஜா வாடிக்கையாக வைத்துள்ளார்

எச். ராஜா வாடிக்கையாக வைத்துள்ளார்

எச்.ராஜா தொடர்ந்து திராவிட இயக்கத்தவர்களையும், தமிழ் உணர்வாளர்களையும், மத சிறுபான்மையினர்களையும், இடதுசாரி ஆதரவாளர்களையும் தரம் தாழ்ந்து பேசி வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இதை பாஜக தலைமை அங்கீகரிக்கிறதா ! என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.

ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்

ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்

தமிழ் இனத்திற்கும், தமிழுக்கும் எந்த வித தொடர்புமற்ற எச்.ராஜா தமிழ் மண்ணில் சமூக அமைதியை குலைப்பதை தமிழக சமூகம் வேடிக்கை பார்க்க கூடாது..

தனது கேவலமான கருத்துக்கு எச்.ராஜா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

ராஜாவிற்கு வலுக்கும் எதிர்ப்புகள்

ராஜாவிற்கு வலுக்கும் எதிர்ப்புகள்

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வைரமுத்து மீதான தரம் தாழ்ந்த விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் எச். ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MLAs Tamimun Ansari, Karunas and Thaniyarasu condemns H.Raja for his derogatory comments over Writer Vairamuthu and seeks apology for it.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற