For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்தது!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

லோக்சபா தேர்தலில் திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

ஆனால் தேமுதிக- திமுக கூட்டணிக்கு மு.க. அழகிரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அக்கட்சி, திமுக அணிக்கு வருமா என்ற கேள்வி எழுந்தது.

குலாம் நபி சந்திப்பு

குலாம் நபி சந்திப்பு

இந்நிலையில் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் திடீரென திமுக தலைவர் கருணாநிதியை சென்னையில் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து திமுக அணியில் காங்கிரஸ் மட்டுமின்றி தேமுதிகவும் இடம்பெறும் என்று கூறப்பட்டு வருகிறது.

மமக முடிவு

மமக முடிவு

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் திமுக அணியில் இடம்பெறுவது என்று மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

அதிமுக அணியில்..

அதிமுக அணியில்..

திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அக்கட்சி, தொகுதி உடன்பாடு ஏற்படாததால் கடந்த 2009 லோக்சபா தேர்தலில் சில தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளில் போட்டியிட்டு 2-இல் வெற்றி பெற்றது.

ராஜ்யசபா தேர்தலில் திமுக ஆதரவு

ராஜ்யசபா தேர்தலில் திமுக ஆதரவு

ராமநாதபுரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வெற்றி பெற்றார். அதன் பிறகு அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த மனிதநேய மக்கள் கட்சி, கடந்த ஜூனில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்களித்தது.

லோக்சபா தேர்தலிலும் திமுக அணி

லோக்சபா தேர்தலிலும் திமுக அணி

இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடப் போவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

English summary
The Manithaneya Makkal Katchi (MMK) announced that it would support the DMK in the forthcoming Parliament elections. This will be the second Muslim outfit to figure in the DMK alliance, after the Indian Union Muslim League.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X