ஷாக்கிங்: பணத்தை திருப்பி கேட்கும் அரசியல் புள்ளிகள்.. வீட்டை பூட்டிவிட்டு ஆர்.கே.நகர் மக்கள் ஓட்டம்
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகரில் அரசியல் கட்சியினரும், விஐபி சுயேட்சை வேட்பாளரும் பணத்தை வாரி இறைத்து வாக்கு சேகரித்ததாக புகார்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் ஆணையத்தால் ஒரு அளவுக்கு மேல் எதையும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் தேர்தலை ரத்து செய்தால் அது வெளிப்படையாக தோல்வியை ஒப்புக்கொண்டதாகிவிடும் என நினைத்த அதிகாரிகள் 'எப்படியோ போங்க' என்பதை போல தேர்தலை நடத்தி முடித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
பணம் கொடுத்தபோது, எங்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதுவல்லவா சத்திய சோதனை
சத்தியத்தை மீறக்கூடாதே என்ற தமிழக மக்களின் மாண்பு (!) வாக்குச்சாவடிகளை நோக்கி கூட்டம் கூட்டமாக அவர்களை உந்தி தள்ளிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதனால்தான் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி சாதனை படைத்தது ஆர்.கே.நகர்.

மையை காட்டு
வாக்களித்துவிட்டு கையில் பூசப்பட்ட மையை காண்பிக்க வேண்டும், அல்லது பணம் திரும்ப வாங்கிக்கொள்ளப்படும் என்று இலை கட்சியும், விஐபி சுயேட்சை வேட்பாளரும் கூறியிருந்தார்களாம். இங்குதான் சிக்கல் எழுந்துள்ளது.

வாக்களிக்க முடியாத தொழிலாளர்கள்
வேறு ஏரியாக்களுக்கு கூலி வேலைக்கு சென்ற சில தொழிலாளர்கள் 4 மணிக்கு மேல் ஆர்.கே.நகர் திரும்பியுள்ளனர். அவர்கள் வாக்குச்சாவடிக்கு செல்வதற்குள் வாக்குப்பதிவு நேரம் முடிந்துவிட்டது. இதனால் அவர்கள் வாக்களிக்க முடியவில்லை. இவர்களும் வாக்களித்திருந்தால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருக்குமாம்.

விடாத வேட்டை
இரவு வீடு வீடாக கையில் மை உள்ளதா என தேடிப்போயுள்ளனர், பணம் கொடுத்த புள்ளிகள். மை இல்லாதவர்களிடம், ஒவ்வொரு ஓட்டுக்கும் கை நீட்டி வாங்கிய ரூ.6000, ரூ.8000 வரையிலான பணத்தை திருப்பி தரும்படி கறாராக கூறியுள்ளனர் அந்த புள்ளிகள். பணம் இல்லை என்று சொன்னவர்களை அடுத்த நாளுக்குள் பணத்தை திருப்பி தர வேண்டும் என மிரட்டி சென்றுள்ளனர்.

வீடுகளுக்கு பூட்டு
மிரட்டலுக்கு பயந்துபோன வாக்களிக்காத வாக்காள பெருங்குடி மக்களில் பலரும் இன்று வீட்டை பூட்டிவிட்டு சொந்தக்காரர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளார்களாம். இதனால் கணிசமான வீடுகள் பூட்டப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தங்களை மறந்துவிடுவார்கள், அப்போது ஏரியாவுக்கு திரும்பலாம் என அவர்கள் தலைமறைவாக உள்ளதாக ஆர்.கே.நகர் கள நிலவரம் தெரிவிக்கிறது.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications